வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திருவடி என்பதன் அர்த்தம் மற்றும் வேறு சொற்கள் 

Updated On: October 27, 2025 6:05 PM
Follow Us:
---Advertisement---
Advertisement
  • திருவடி குறிக்கும் வேறு சொற்கள் 

பொதுவாக நாம் பயன்படுத்தும் நிறைய சொற்களுக்கு அர்த்தம் தெரியாமலே பேசுகிறோம். தொழில்நுட்பம் வளர்வது போல் நாமும் வளர வேண்டும் என்பதற்காக ஆங்கிலம் கலந்த வார்த்தைகளில் பேசுகிறோம். நம் முன்னோர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற சதேகம் வரும். ஏனென்றால் அந்த வார்த்தைகள் எல்லாம் நாம் பயன்படுத்துவதில்லை. அதனால் ஒரு சொல்லை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரிய வேண்டும் என்றால் நாம் முதலில் அந்த சொல்லை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். 

நமது தாய்மொழியான தமிழ் மொழியில் உள்ள வேறு என்ற சொல்லுக்கு அதிக அர்த்தங்கள் மற்றும் மதிப்புகள் உள்ளது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒரு பொருளை ஒரு சொல்லை பயன்படுத்தி தான் அழைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதனை பற்றி நாம் நன்கு ஆராய்ந்து பார்த்தோம் என்றால் அதற்கு பல அர்த்தங்கள் மற்றும் பொருட்களுடன் பல வார்த்தைகள் இருக்கும். அந்த வகையில்  திருவடி என்பதன் அர்த்தம் மற்றும் வேர் சொல் என்பதற்கான அர்த்தம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க….

திருவடி என்றால் என்ன ?

திருவடி என்பது திருமாலின் பாதங்கள் ஆகும். இது பரம்பொருளை வணங்கும் ஒரு வழிமுறையாகவும் ஆழ்ந்த ஆன்மீக வழிபாட்டின் குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது கருடன் மற்றும் அனுமான் போன்ற திருமாலின் வாகனங்கள் மற்றும் சேவகர்களை குறிக்கலாம். 

திருவடி என்பது இறைவனின் பாதங்களை வணங்கும் ஒரு வழியாக திருவடிகள்  கருதப்படுகின்றன. இறைவனை வணங்கும் வழியாக இருப்பது மட்டுமல்லாமல் மெய்ப்பொருளை அடையும் வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 

திருவடி வேறு சொல் :

  • அடி
  • தாள்
  • நற்றாள்
  • சீபாதம்
  • மாணலடி
  • இலானடி
  • புள்ளரசு
  • பெரிய திருவடி  போன்ற வேறு சொற்களை பயன்படுத்தி கூட இந்த திருவடி என்பதை குறிப்பிடுவார்கள்.

உண்மை என்பதை குறிக்கும் வேறு சொற்கள் இவைதானா..?

எடுத்துக்காட்டு :

  •  சித்தர்களும், ஞானிகளும் இறைவனின் திருவடியை புகழ்ந்து பாடியுள்ளனர். இது இறைவனின் திருவடிகளை புகழ்வது மட்டுமல்லாமல் அதிலிருந்து ஆன்மீக பாதையில் முன்னேறுவதை குறிக்கிறது.
  • குருவின் பாதங்களை பிடித்து  சீடன் ஆசீர்வாதம் வாங்குவதை கூறலாம். இது குருவிடம்  பெறுவதையும் அவரின் வழிகாட்டலின் படி நடப்பதையும் குறிக்கும்.
  • திருவடி என்பது இறைவனை அடையும் ஒரு வழியாகும். இது பிறவி பெருங்கடலில் தப்பித்து இறைவனை அடையும் எளிய வழி ஆகும்.
  • பெற்றோரின் சொற்களை கேக்காமல் இருக்கும் வாழ்க்கை  நாயை விட கேவலமானது என்று ராமனின் கூற்று திருவடியின் சிறப்பை கூறுகிறது.
  • இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன் உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறனே! 

 

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now