திசை என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

Thisai Veru Sol in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் திசை என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். திசை என்றால் என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், திசை என்பதற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

திசை என்பதை ஆங்கிலத்தில் (Direction) என்று கூறுவார்கள். நான்கு திசை இருக்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு திசைகள் உள்ளது.திசையை அறிய உதவும் கருவியின் திசைகாட்டியாகும். பொதுவாக, திசையை குறிக்க அம்புக்குறி போன்ற பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஓகே வாருங்கள் திசை என்ற சொல்லுக்கு வழங்கப்படும் வேறு சொற்கள் பற்றி பின்வருமாறு படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

சூரிய திசை யாருக்கு யோகம் தரும்..!

திசை என்றால் என்ன.?

  • திசை என்பது ஒரு இடத்தை மையமாக வைத்து, மற்ற இடங்களின் இடைப்பட்ட தூரத்தில் கணக்கில் கொள்ளாமல் அந்த இடங்களை மட்டுமே சார்ந்து சொல்லப்படும் செய்து ஆகும். திசைகளை குறிக்க அம்புக்குறி போன்ற பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற பெயரில் திசைகள் புழக்கத்தில் வர ஒரு காரணம் உண்டு. அக்காலத்தில் வாழ்ந்த ஆரம்ப கால மக்கள், சூரியன் உதிக்கும் திசை கீழான பள்ளமான திசை என்பதால், அத்தனை கீழ் திசை அதாவது, கிழக்கு திசை என்று கூறினார்கள்.
  • வட பாகத்தில் வட மரங்கள் என்று சொல்லக்கூடிய ஆலமரங்கள் அதிகமாக வளர்ந்து இருந்ததனால் அதனை வட திசை என்று குறிப்பிட்டார்கள்.
  • தென் கண்டத்தில் தென்னை மரங்கள் அதிகமாக வளர்ந்து இருந்தமையாலும்,  தென்றல் காற்று அத்திசையில் இருந்து அதிகமாக வீசுவதாலும் அதனை தென் திசை என்று குறிப்பிட்டார்கள்.
  • சூரியன் மறையும் திசையை மேற்கு திசை என்றும் குறிப்பிட்டு நான்கு திசையையும் கூறினார்கள்.
  • திசையை குறிக்கும் சொற்கள் பல உள்ளன. அதனை பற்றி பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்

திசை வேறு சொல்/வேறு பெயர்கள்:

  • திக்கு
  • மாதிரம்
  • வம்பல்
  • விசும்பே
  • காட்டை
  • அரிதம்
  • ககுபம்
  • புலம்

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும், திசை என்பதை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும். அக்காலத்தில் பெரும்பாலும், திசை என்பதை திக்கு என்று தான் கூறுவார்கள்.

எந்த திசையில் காகம் கத்தினால் என்ன பலன் கிடைக்கும்..?

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement