தொடக்கம் வேறு பெயர்கள்
நம்முடைய நாட்டில் தாய்மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இந்த தமிழ் மொழியில் பல வார்த்தைகள் இருக்கிறது. இந்த வார்த்தைகள் அனைத்திற்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. ஆனால் நமக்கு தெரிந்த அர்த்தங்களை மட்டும் நினைத்து பேசுவோம். மற்ற மொழிகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ளா விட்டாலும் நம்முடைய தாய்மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
அது போல இந்த வார்த்தைகளுக்கு பல சொற்கள் இருக்கும், அதனையும் அறிந்து கொள்ள வேண்டும், அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் ஒரு சொல் தரும் பல சொற்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தொடக்கம் என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
தொடக்கம் என்றால் என்ன.?
தொடக்கம் என்பது ஒரு செயலை ஆரம்பிப்பதை குறிக்கிறது. அதாவது ஒரு செயல் அல்லது நிகழ்வு அல்லது கருத்துக்களின் ஆரம்பத்தை குறிக்கிறது. இதனை எடுத்துக்காட்டுடன் தெரிந்து கொள்வோம் வாங்க..
முதல் முதலாவதாக பள்ளிக்கு செல்லும் குழந்தை
நீங்கள் ஒரு தொழில் செய்ய வேண்டும் என்று அதற்கு முதற்கட்டமாக அஸ்திவாரம் போடுவது
ஒரு செயலை செய்வதற்கு நீங்கள் ஆரம்பத்தில் பயந்திருப்பீர்கள், ஆனால் அதனை பழக பழக பயம் நீங்கியிருக்கும்.
நான் திருமண ஆன பிறகு புகுந்த வீட்டில் முதலில் வைத்தது சாம்பார் தான்.
பள்ளியில் சேர்ந்த ஆரம்பத்தில் உங்களுக்கு நண்பர்கள் 3 பேர் தான் இருந்திருப்பார்கள், ஆனால் நாளடைவில் நண்பர்கள் அதிகரித்திருப்பார்கள்.
தொடக்கம் என்பதற்கான வேறு பெயர்கள்:
தொடக்கம் என்பதை பல சொற்களால் அழைக்கலாம், அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
- ஆரம்பம்
- துவக்கம்
- முதல்
- ஆதி
தொடக்கம் எதிர்ச்சொல்:
தொடக்கம் என்பதற்கான எதிர்ச்சொல் என்னவென்று அறிந்து கொள்வோம்.
- முடிவு
- இறுதி
- கடைசி
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |