துணிச்சல் வேறு சொல்
பொதுவாக நாம் எல்லா விஷயங்களையும் கற்று கொள்ள வேண்டும் என்று தான் நினைப்போம். அதற்காக பல முறைகளை கையாளுவோம். சில பேருக்கு அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக புத்தகங்கள் மற்றும் கிளாஸ் போன்றவைக்கு செல்வார்கள். மேலும் நாம் பேசும் தமிழ் மொழிகளில் உள்ள வார்த்தைகளில் பல அர்த்தங்கள் உள்ளது. ஒரு வார்த்தையே நாம் பல முறைகளில் சொல்லலாம். அதவாது எடுத்துக்காட்டாக சந்தோசம் என்ற வார்த்தையை மகிழ்ச்சி, ஆனந்தம் போன்ற வார்த்தைகளில் அழைக்கலாம். அதனால் இது போல உள்ள வார்த்தைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முதல் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் நினைப்பவர்கள் அனைவரும் இப்படி பல வார்த்தைகள் உள்ளதை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் துணிச்சல் என்பதற்கான வேறு சொல்லை தெரிந்து கொள்வோம்.
துணிச்சல் என்றால் என்ன.?
இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் சந்தோசம், கோபம், அச்சம், மடம் போன்ற பல குணங்கள் வெளிப்படுகின்றன. இந்த குணங்களில் ஒன்று தான்.
எடுத்துக்காட்டு:
ஒருவன் சைக்கிள் ஓட்டுவதற்கு பயப்படுவான், ஆனால் வண்டி அசால்ட்டா ஓட்டுவான் இதை தான் தைரியம் என்று கூறுகிறோம்.
நாயை பார்த்தால் அச்ச படுவான், அதுவே பாம்பை கையால் பிடிப்பான் இந்த செயலை தான் துணிச்சல் என்று கூறுகிறோம்.
எந்த செயலையும் பயம் இல்லாமல் தைரியமாக செய்வதை துணிச்சல் என்று கூறுகிறோம்.
உன்னால் செய்ய முடியாது என்று யாரவது சொன்னாலும் கூட அதை மன தைரியத்தோடு செய்து முடிப்பது.
துணிச்சல் வேறு சொல்:
- தைரியம்
- வீரம்
- துணிவு
- சாகசம்
- தீரம்
- துணிகரம்
- மதர்ப்பு
- மனதிடம்
- மனோதிடம்
- மனோபலம்
- மிடுக்கு
- முறுக்கு
- உறுதி
- திடம்
மேகம் வேறு சொல் |
உதவி வேறு சொல் |
நடனம் வேறு சொல் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |