அதிகம் கடன் சுமை கொண்டுள்ள 10 நாடுகள் பட்டியல்.
வணக்கம் நண்பர்களே 🙏 இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றித்தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாகவே உலகில் கடன் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. அப்படியும் இருந்தால் 30 % தான் இருப்பார்கள். கடன் இல்லாதவர்கள் இன்றைய உலகில் முதல் பணக்காரர்கள் கூட இல்லை என்றும் சொல்லலாம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கடன் இல்லாமல் வாழ்வது சாத்தியமில்லை. உலகமே கடனில் தான் முழ்கி கிடைக்கிறது. ஜிடிபி விகிதத்தில் அதிக கடன் கொண்டுள்ள நாடு எதுவென்று நம் பதிவில் பார்க்கலாம் வாங்க….
உலகின் மிகச்சிறிய நாடு எது தெரியுமா |
ஜிடிபி விகிதத்தில் அதிகம் கடன் கொண்டுள்ள 10 நாடுகள்:
ஜிடிபி என்பது நாட்டின் நிலப்பரப்பு அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கிடும் (Gross Domestic Product) மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும். இதனை நாமினல் ஜிடிபி என்றும் ரியல் ஜிடிபி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஜிடிபி மூலம் நாட்டின் பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது. அதாவது அந்த நாட்டின் பொருளாதார உற்பத்தி குறைந்துள்ளதா இல்லை அதிகரித்துள்ளதா என்று அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வைத்து கணக்கிடப்படும். இதன் மூலம் அந்த நாட்டின் பணவீக்கம் மற்றும் பண மதிப்பு அதிகரித்துள்ளதா என்று தெரிந்துகொள்ளவும் முடியும். அந்த வகையில் உலகில் அதிகம் கடன் கொண்ட நாடு என்னவென்று பார்க்கலாம்.
அமெரிக்கா நாடு :
உலகில் அதிகம் மக்கள் தொகையை கொண்ட மூன்றாவது நாடு அமெரிக்கா ஆகும். உலகில் மிகப் பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா கடனில் உள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும். பொருளாதார நாடான அமெரிக்காவிற்க்கு கடன் மதிப்பானது 19.23 டிரில்லியன் டாலராகும். இந்தியாவிற்கு தர வேண்டிய கடன் தொகை மட்டுமே 21,600 கோடி டாலராகும். அமெரிக்காவில் வாழ்வாதார செலவினங்கள் ஆனது மிகவும் அதிகம் மதிப்பு ஆகும். இந்த நாட்டில் வருமானம் அதிகம் என்றாலும் அதே அளவில் செலவுகளும் அதிகமாக காணப்படுகிறது.
ஜப்பான் (Japan) நாடு:
நம் பூமியில் பல நாடுகள் இருந்தாலும் ஜப்பான் ஆனது ஒரு சிறந்த நாடாகவே இருக்கிறது. ஜப்பான் ஒரு தீவு கூட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. வளர்ந்த நாடுகளில் ஒன்று ஜப்பான் நாடாகும். ஜப்பானின் மிகப்பெரிய நம்பிக்கையே டெக்னாலஜி துறை தான். இது புதிதான பொருட்களை கண்டுபிடிக்கும் நாடாகும். ஜப்பான் நாடானது பரப்பளவில் சிறிய நாடக இருந்தாலும், கடன் மதிப்பில் முதல் நாடக ஜப்பான் உள்ளது. இந்த நாட்டின் கடன் மதிப்பானது சுமார் 9087 டிரில்லியன் USD டாலராக இருக்கின்றது. ஆசியாவை ஒப்பிடும் பொழுது ஜப்பான் மூன்றாவது பணக்கார நாடக இருந்தாலும். கடனில் முதல் 10 நாடுகளில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. உலகில் மக்கள் தொகை அளவில் இந்த நாடு 10 வது நாடாகவும் உள்ளது.
போர்ச்சுகல் (Portugal) நாடு:
ஐரோப்பா கண்டத்தில் தென்மேற்கு பகுதில் உள்ள நாடுதான் போர்ச்சுக்கல். இந்த நாட்டின் பரப்பளவு 92,212 கிமீ (Approx) ஆகும். இந்த நாட்டின் மக்கள் போர்ச்சுக்கீயர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த நாடுகளில் துணிகள், காலணிகள் மற்றும் ஆடைகள் துறையில் ஏற்றுமதியில் அதிகம் செய்யப்படுகிறது. போர்ச்சுக்கல் நாட்டியில் விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது, விவசாயத்துறையில் பெரும்பாலான மக்கள் பங்கேற்று வருகின்றனர்.ஆனால் இந்த நாட்டில் கடன் மதிப்பானது 264 பிலியன் USD டாலராகும். இந்த நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளில் முதலீடு மிகவும் குறைவாகும்.
கீரிஷ் (GREECE) நாடு:
கீரிஷ் நாடானது பணக்கார நாடுகளில் இதுவும் ஒரு நாடாகும். ஆனால் கடன் அளவில் இந்த நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நாட்டின் கடன் மதிப்பானது 379 பில்லியன் USD டாலராகும். இந்த நாட்டின் தனி நபருடைய வருமானம் மட்டுமே 30,000 டாலர்களுக்கு அதிகமாகவே உள்ளது.
சைப்ரஸ் (Cyprus) நாடு:
சைப்ரஸ் நாட்டில் கனிம வளங்கள் அதிக அளவில் முன்னுரிமை பெற்றுருக்கிறது. அதாவது செம்பு பிரித்தெடுத்தல், சுண்ணாம்பு, பளிங்கு, களிமண்கள் மற்றும் இயற்கை சாயங்கள் ஆகியவை உருவாக்கப்படுகிறது. சைப்ரஸ் நாடுகளில் விலங்குகள் அதிகம் வளரும் நாடாகவும் இருக்கிறது. ஐரோப்பிய நாட்டில் 16 வது இடத்தில் இந்த நாடு உள்ளது. இதனுடைய கடன் அளவு 21.64 பில்லியன் USD டாலராக உள்ளது. இந்த நாட்டின் தனிநபர் கடன் மட்டுமே 26,623.80 டாலராக உள்ளது.
இத்தாலி (ITALY) நாடு:
உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் இத்தாலி முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்றாகும். கிறிஸ்த்துவர் அதிகம் வசிக்கும் நாடாகவும் இத்தாலி உள்ளது. இந்த நாட்டில் கால்பந்து விளையாட்டு முக்கிய பங்கு பெற்று வருகிறது. அதிக வருவாய்களை கொண்ட நாடுகளில் இதுவும் ஒன்று. இதன் கடன் தொகையானது 2.48 டிரில்லியன் USD டாலராகும். இதன் தனிநபர் வருவையானது 24,742.01 டாலராகும்.
பெல்ஜியம் (Belgium) நாடு:
பெல்ஜியம் நாட்டில் சாக்லேட்கள் உலகம் புகழ் பெற்றவையாகும். பெல்ஜியம் அதிகம் வருமானம் பெற கூடிய நாடுகளில் ஒன்றாகவும். இதனுடைய வருமானம் பெரும்பாலும் சேவைத்துறையில் இருந்து பெறப்படுகிறது. பெல்ஜியத்தின் வரி விகிதம் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் கடன் மதிப்பானது சுமார் 456.18 பில்லியன் டாலராகும். இந்த நாட்டின் சராசரி சம்பள விகிதம் 37,923 பவுண்டுகளாகும்.
பூடான் (Bhutan) நாடு:
பூடான் நாடானது வரலாற்று ரீதியாக தொலைதூர தொடர்பில்லாத ராஜ்ஜியம் நாடாகும். பூடான் நாட்டின் மற்றொரு பெயர் பூட்டான் என்றும் அழைக்கப்படுகிறது. தனித்துவமான தேசிய அடையாளைத்தை காப்பதில் பூட்டான் கலாச்சாரத்தில் ஆழமாக உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நாடானது குறைவான வருமானம் கொண்ட ஒரு நாடாகும். இந்த நாட்டின் கடன் மதிப்பானது 2.33 பில்லியன் USD டாலராகும். இந்த நாட்டின் தனி நபர் வருமானம் 1460.33 டாலராகும்.
சிங்கப்பூர் நாடு:
சிங்கப்பூர் நாடானது சிறிய பரப்பளவை கொண்ட நாடாகும், ஆனால் மக்கள் தொகையில் பன்மடுங்கு உயர்ந்துள்ளது. சிங்கப்பூர் ஆனது சிங்கத்தின் ஊர் என்று தமிழ் பெயரை கொண்டுள்ளது. இந்த நாட்டில் தமிழர்களும் அதிகம் பணிபுரிந்து வருகிறார்கள். அதே நேரம் சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாகவும் உள்ளது. மக்கள் தொகையில் சீனர்கள் அதிகம் வசிக்கும் நாடாகும். இது சிறந்த வணிகத் தளமாகவும் இருக்கின்றது. இந்த நாட்டின் கடன் மதிப்பானது 254 USD பில்லியன் டாலர் ஆகும். தனி நபர் வருமானம் ஆனது 86,480 டாலராக உள்ளது.
ஸ்பெயின் (Spain) நாடு:
ஸ்பெயின் நாடானது ஒரு தனிப்பட்ட கலாச்சாரத்தை கொண்டுலுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு வலுவான பொருளாதாரம் மற்றும் உயர் வாழ்க்கை தரங்களை கொண்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா மற்றும் தொடர்புடைய சேவைதுறை உள்ளது. இந்த நாட்டின் கடன் மதிப்பானது ஜிடிபி விகிதத்தில் 1.24 டிரில்லரின் டாலர் ஆகும். தனி நபர் வருமானமானது 30.116 USD டாலராகும். ஸ்பெயினில் வேலை விகிதமானது 14.73% உள்ளது.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | GK in Tamil |