Types of Doctors list
மனிதனாக பிறந்த அனைவருக்குமே உடல் நல பிரச்சனை ஏற்படும். ஆனால் எந்த மாதிரியான பிரச்சனைக்கு எந்த மருத்துவரை அணுக வேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் காய்ச்சல் வந்தால் Gendral doctor-யை பார்க்க வேண்டும் என்று தெரியும். ஆனால் வேறு ஏதோ உடலில் கட்டி ஏற்படுகிறது. அதற்கு நீங்கள் Gendral doctor-யை பார்க்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அந்த மருத்துவர் வேறு ஒரு மருத்துவரை Refer செய்வார்கள். அதனால் இந்த மாதிரி சென்று பணத்தை வீணடிக்காமல் எந்த பிரச்சனைக்கு எந்த மருத்துவரை அணுக வேண்டும் என்று இந்த பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளவும்.
Anethesiologist- மயக்க மருந்து நிபுணர்:
ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றால் வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து கொடுக்க வேண்டும். இது எல்லாராலும் கொடுக்க முடியாது. மயக்க மருந்து நிபுணரால் மட்டும் தான் முடியும்.
Audiologist – செவி திறன் குன்றியவர்களுக்கு சிறப்பு மருத்துவர்:
வாய் பேச முடியாமல் இருப்பவர்கள், காது கேட்க முடியாமல் இருப்பவர்களுக்கு பார்க்க கூடியவர்.
Andrologist – ஆண்கள் சிறப்பு மருத்துவர்:
ஆண்கள் மலட்டு தன்மை, விந்தணு பிரச்சனை போன்றோர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்.
உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது..?
Caridiologist- இருதய நோய் சிறப்பு மருத்துவர்:
நெஞ்சு வலி, இரத்த அழுத்தம், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவைக்கு இந்த துறை மருத்துவரை அணுகலாம்.
Dermatologist – தோல் நோய் மருத்துவர்:
தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாவற்றிக்கும் பார்க்க கூடியவர்.
Dentist- பல் மருத்துவர்:
பற்கள் மற்றும் ஈறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு இவர்களை அணுகலாம்.
Epidemiologist – தொற்று நோய் தடுப்பு மருத்துவர்:
டெங்கு, சிக்கன் குனியா போன்ற தொற்று நோய் பிரச்சனைக்கு சிகிச்சை அளிப்பவர்.
Gastronterologist- இரைப்பை குடல் நோய் மருத்துவர்
குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பவர்.
Gyneocologist – பெண்கள் நல சிறப்பு மருத்துவர்:
பெண்ணுறுப்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை, கருப்பை பிரச்சனை, பிரசவம் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பவர்.
Hematologist- இரத்த நோய் சிறப்பு மருத்துவர்:
இரத்தம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளிப்பவர்.
Hepatologist – கல்லீரல் சிறப்பு மருத்துவர்:
கல்லீரல், பித்தப்பை, கணையம் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு சிகிச்சை அளிப்பவர்.
Pediatrician- குழந்தை நல சிறப்பு மருத்துவர்:
பிறந்த குழந்தை முதல் 10 வயது குழந்தை வரை உள்ளவர்களுக்கு காய்ச்சல், சளி, தொற்று நோய் போன்ற பிரச்சனைக்கு சிகிச்சை அளிப்பவர்.
Neurologist- நரம்பியல் நோய் வல்லுநர்:
மூளை நரம்பு, முதுகு தண்டு வடம், வலிப்பு நோய், முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பவர்.
Nephrologist – சிறுநீரக சிறப்பு மருத்துவர்:
Urine சம்மந்தப்பட்ட பிரச்சனை, கிட்னி பிரச்சனகளுக்கு சிகிச்சை அளிப்பவர்.
Opthalmologist- கண் மருத்துவர்:
தூரப்பார்வை, எட்டப்பார்வை, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பவர்.
Otolaryngologist / ENT- காது மூக்கு தொண்டை நிபுணர்:
காது மூக்கு தொண்டை பிரச்சனை, சைனஸ் பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பவர்.
Orthopedist- எலும்பு மருத்துவர்:
எலும்பு மற்றும் தசை பிரச்சனை, முதுகு வலி, கால் வலி, கழுத்து வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பவர்.
Oncologist- புற்றுநோய் மருத்துவர்:
புற்று நோய் பிரச்சனைக்கு சிகிச்சை அளிப்பவர்.
Psychiatrist- மன நல மருத்துவர்:
மன நலம் சம்மந்தப்பட்ட பிரச்சனை, மன அழுத்தம், தற்கொலை முயற்சி போன்ற பிரச்சனைக்கு சிகிச்சை அளிப்பவர்.
மருத்துவர்கள் வெள்ளை நிற ஆடையும், Operation Theatre -யில் பச்சை நிற ஆடையும் அணிய காரணம் என்ன..?
இதுபோன்று பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |