யூனியன் பிரதேசம் என்றால் என்ன.? | What is Union Pradesh in Tamil

Advertisement

யூனியன் பிரதேசம்

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. நம் அனைவர்க்கும் இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 38 மாவட்டங்கள் இருக்கிறது என்பது தெரியும். ஆனால், இதில் யூனியன் பிரதேசங்கள் என்றால் என்ன.? என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

பள்ளிப்படிக்குபோது, புத்தகத்தில் யூனியன் பிரதேசங்கள் என்பதை படித்து இருப்போம். நம் நாட்டில் மொத்தம் 9 யூனியன் பிரதேசங்கள்  என்பதை அறிந்து இருப்போம். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் யூனியன் பிரதேசம் பற்றிய முழு விவரங்கள் தெரிந்திருக்க மாட்டோம். ஓகே வாருங்கள், யூனியன் பிரதேசம் பற்றிய சில விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

யூனியன் பிரதேசம் என்றால் என்ன.?

யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு நேரடியாக நிர்வகிக்கும். அதாவது மத்திய அரசு, யூனியன் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநரை நியமிக்கும். அவர் ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருந்து பிரதேசத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பார்த்துக் கொள்வார். இந்தியாவில் மொத்தம் 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளது. அதாவது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, சண்டிகர், டாமன் மற்றும் டியூ, லட்சதீபம், புதுச்சேரி, டெல்லி, லடாக் மற்றும் ஜம்மூ காஷ்மீர் ஆகிய 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

இந்தியாவில், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசம் மற்றும் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசம் என இரண்டு வகையான யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அதாவது, இந்த யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் வரும் டெல்லி மற்றும் புதுச்சேரியில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை நடைபெறும். இதில், முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள்.  இந்த இரண்டு யூனியன் பிரதேசத்தில் இருக்கும் சட்டமன்றத்துக்கு சில அதிகாரங்கள் இருக்கும். சொல்லப்போனால் இது ஒரு  சிறிய மாநிலம் போலவே இவை செயல்படும். இதுசட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசம் ஆகும்.

ஆனால், இதனை தவிர்த்து மற்ற யூனியனின் பிரதேசத்திற்கு இதுபோன்று இருக்காது. அவை அனைத்தும், நேரடியாக மத்திய அரசால் நிர்வகிக்கப்படும். இவை சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசம் ஆகும்.

தற்போது ஜம்மூ காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட உள்ளது. ஜம்மூ மற்றும் காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜம்மூ மற்றும் காஷ்மீருக்குத் தனியே சட்டசபை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய மாநில போக்குவரத்து பதிவு எண்கள்

மாநிலத்திற்கும் யூனியன் பிரேதசத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள்:

மாநிலம்  யூனியன் பிரதேசம்
ஒரு மாநிலம் என்பது தனி அரசாங்கத்தை மட்டுமே கொண்டு செய்லபடும் ஒரு தொகுதிப் பிரிவாகும். இதில் மாநிலங்களுக்குச் சொந்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் உள்ளது. யூனியன் பிரதேசம் என்பது யூனியனால் ஆளப்படும் ஒரு சிறிய நிர்வாக அலகு ஆகும். அதாவது, மத்திய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது.
ஆளுநர் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆவர். இந்திய குடியரசுத் தலைவர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத் தலைவர் ஆவார்.
மக்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மாநிலத்தை நிர்வகிக்கிறார். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒரு நிர்வாகியால் யூனியன் பிரதேசம் நியமிக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளது. யூனியன் பிரதேசங்களுக்கு தன்னாட்சி அதிகாரங்கள் இல்லை.
யூனியன் பிரதேசங்களை விட மாநிலங்கள் அளவில் பெரியவை. மாநிலங்களுடன் ஒப்பிடும் போது யூனியன் பிரதேசங்கள் மிகவும் சிறியவை.

அமலாக்கத்துறை என்றால் என்ன

இதுபோன்று தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Learn 
Advertisement