Uthadugal Ottatha Thirukkural in Tamil
பொதுவாக நம் அனைவருக்குமே திருக்குறள் பற்றி தெரியும். அதேபோல் உள்ள ஒவ்வொரு வரிகளுக்கு பின்னாலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதனை படிக்கும் போது அதில் உள்ள அர்த்தங்கள் அனைத்தும் நம்முடைய வாழ்க்கையை தொடர்புபடுத்தி எழுதியுள்ளார்கள். அதேபோல் திருக்குறளில் நிறைய சிறப்புகள் உள்ளது. அதனை பற்றியும் அதனை தொடர்ந்து உதடுகள் ஓட்டதாக திருக்குறள் எது என்பதை பற்றியும் இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
Uthadugal Ottatha Thirukkural in Tamil:
திருக்குறளில் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் தோன்றியதாக கூறப்படுகிறது.
திருவள்ளுவர் மொத்தம் 1330 குறட்பாக்களை எழுதியுள்ளார். திருக்குறளில் உள்ள அனைத்து நூல்களும் குறள் வெண்பாக்களால் ஆனதால் குறள் என்றும் அதன் உயர்ந்த நிலை கருதி திரு என்ற அடைமொழியுடன் திருக்குறள் என பெயர் பெற்றது.
அதேபோல் இந்த 1330 குறளிலும் தமிழ் என்ற வார்த்தையே பதிக்கப்படவில்லை. திருக்குறள் நூலை மொத்தமாக 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளில் முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு 1812. திருக்குறளுக்கு வந்த முதல் பெயர் முப்பால் ஆகும். திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது. திருக்குறளில் உள்ள ஒவ்வொரு குறள்களும் 2 அடிகள் மற்றும் ஏழு சீர்களை உடையது.
இது போன்ற திருக்குறளை பற்றிபேசினால் அதனுடைய பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். ஆகவே இன்றைய பதிவு என்னவோ அதனை பார்க்கலாம். அதாவது 1330 திருக்குறளில் உதடுகள் ஒட்டாத திருக்குறள் எது என்று பார்க்கலாம் வாங்க..!
உதடுகள் ஒட்டாத திருக்குறள்:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்என்ற குறளாகும். இதற்கு என்ன அர்த்தம் என்றால், எந்த பொருளாக இருந்தாலும் அதில் நாம் ஓரளவு தூரம் இருக்கவேண்டும். அதாவது ஒரு ஈடுபாடு இல்லாமல் கொஞ்சம் தூரமாக வைத்துகொண்டால் அதன் மூலம் நமக்கு துன்பம் வராது என்று இந்த திருக்குறள் மூலம் எடுத்துரைக்கிறது.
அகர முதல எழுத்தெல்லாம் திருக்குறள் விளக்கம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் குறள் விளக்கம்
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |