வஞ்சகம் வேறு சொல் | Vanjagam Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வஞ்சகம் என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வஞ்சகம் என்ற சொல்லினை நாம் அனைவருமே கேட்டு இருப்போம். அனால், அதற்கான அர்த்தமும், அதே அர்த்தத்தை குறிக்கும் வேறு சொல் பற்றி நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
பொதுவாக தமிழ் மொழியில் உலா ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அர்த்தமும் அந்த அதே அர்த்தத்தை குறிக்கும் வேறு சொற்களு இருக்கும். இதுபோன்ற கேள்விகள் போட்டி தேர்வுகளில் அதிகம் கேட்கப்படும். ஆனால், நம்மில் பலருக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளுக்கு இதுபோன்ற கேள்விகள் தான் வீட்டு பாடமாக இருக்கும். ஆகையால் நீங்கள் அனைவரும் வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில், நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி கொடுத்துள்ளோம். ஆகையால், நீங்கள் வேறு சொற்கள் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் பொதுநலம் வலைத்தளத்தை பார்வையிடுங்கள். சரி வாருங்கள், இப்போது வஞ்சகம் என்பதன் வேறு சொல் பற்றியும் வஞ்சகம் என்றால் என்ன என்பது பற்றியும் பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம்.
வஞ்சகம் என்றால் என்ன.?
வஞ்சகம் என்பது, உண்மையாக இல்லாமல் ஏமாற்றி, மோசடி செய்தல் ஆகும். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு அதனை மறைத்து மற்றவர்களிடம் பொய்யாக இருப்பது வஞ்சகம் ஆகும். வஞ்சகம் என்பதை கள்ளத்தனம் என்று புரிந்துகொள்ளலாம். உண்மையை மறைத்து, பொய்யாக இருந்து ஒருவரை ஏமாற்றுதல் வஞ்சகம் ஆகும். இந்த நிலையில் பலரும் இருப்பார்கள்.
வஞ்சகம் என்பது ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் மாறுபாடும். எடுத்துக்காட்டாக, குடும்பத்தில் உள்ளவர்களை, பிடித்தவர்களை, நண்பர்களை ஏமாற்றுதல் தனிப்பட்ட வஞ்சகம் ஆகும்.
தொழிலில், வியாபாரத்தில் போலியான பொருட்களை விற்பனை செய்வது, விலையை அதிகரித்து கூறுவது அல்லது மோசடி செய்தல் போன்றவை வர்த்தக வஞ்சகம் ஆகும்.
பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி தவறாக வழிநடத்துதல் அரசியல் வஞ்சகம் ஆகும். ஆகவே, எந்த இடத்தில எல்லாம் ஏமாற்றம், கள்ளத்தனம் இருக்கிறதோ அதுதான் வஞ்சகம்.
வஞ்சகம் என்பதன் வேறு சொல்:
- மோசடி
- கபடம்
- போலி
- ஹம்பக்
- கள்ளத்தனம்
- வஞ்சித்தல்
- கோல்மால்
- ஏமாற்றுதல்
- தந்திரம்
- சதி
- பொய்வேடம்
- வஞ்சனை
மேலே கூறியுள்ள சொற்கள் அனைத்தும் வஞ்சகம் என்ற சொல்லிற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் ஆகும்.
வஞ்சகம் in English:
வஞ்சகம் என்பதை ஆங்கிலத்தில் Deceit என்று கூறுவார்கள்.
| இது போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |














