Vari Veru Sol in Tamil
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..! ஒவ்வொரு நாளும் நம் பதிவின் வாயிலாக நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் இருக்கின்றன. அப்படி நம் வாழ்க்கையில் நாம் அதிகம் பேசும் வார்த்தைகளில் வரி என்ற வார்த்தையும் ஓன்று. ஆகவே நாம் இந்த பதிவின் வாயிலாக வரி என்றால் என்ன..? வரி என்பதற்கு வேறு சொல் என்ன என்பதை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
வரி என்றால் என்ன..?
பொதுவாக நம் அனைவருக்குமே வரி என்றால் என்ன என்று தெரியும். அதாவது வரி என்பது பொதுப் பணிகளுக்கான வருவாயை உயர்த்துவதற்காக, ஒரு தனிநபர் அல்லது ஒரு நிறுவனத்திற்கு அரசாங்கம் விதிக்கும் கட்டாயக் கட்டணம் அல்லது நிதிக் கட்டணம் என்பதாகும்.
அப்படி வரி என்ற பெயரில் சேகரிக்கப்பட்ட தொகையானது பல்வேறு பொதுச் செலவுத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது ஒவ்வொரு தேசத்தின் அரசாங்கமும் நாட்டை நடத்த அதன் குடிமக்களிடமிருந்து வரி வசூலிக்க வேண்டும். அப்படி உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உங்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு நீங்கள் வரி செலுத்துகிறீர்கள். அது ஒரு நாட்டை நியாயமாக நடத்துவதற்கு வரி வசூல் அவசியமானதாக இருக்கிறது.
அதுபோல நீங்கள் ஒரு தனிநபராக இருந்தாலும் அல்லது வணிக உரிமையாளராக இருந்தாலும், நீங்கள் வரி செலுத்த வேண்டும்.
வரி வேறு சொல்:
வரி என்ற சொல்லுக்கு வேறு பெயர்களும் இருக்கின்றன. அது என்ன என்பதை கீழ் காண்போம்.
- கப்பம்
- கோடு
- ஒழுங்கு நிரை
- வரிதல்
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |