வேகம் என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

வேகம் வேறு சொல் | Vegam Veru Sol in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் வேகம் என்பதற்கான வேறு சொல் என்ன என்பதை (Vegam Veru Sol in Tamil)  பின்வருமாறு கொடுத்துள்ளோம். என்னதான் நாம் தமிழ் நன்றாக பேசினாலும், தமிழில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் பற்றி தெரிவதில்லை. அர்த்தம் தெரியாதலால் அதற்கு வேறு ஏதேனும் பெயர் உள்ளதா என்று கேட்போம். அதாவது, எடுத்துக்காட்டாக, கார்ப்பு என்றால் நம்மில் பலருக்கும் தெரியாது. அதுவே காரம் என்றால் அனைவருக்கும் தெரியும். இதுபோன்று நமக்கு தெரியாத பல வார்த்தைகள் உள்ளது.

எனவே, அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு தமிழ் சொற்களுக்கான வேறு சொற்கள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் வேகம் என்ற சொல்லிற்கான வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வேகம் என்ற சொல்லிற்கான வேறு சொல் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

வேகம் என்றால் என்ன.?

வேகம் என்பது, ஒரு பொருள் குறிப்பிட்ட தூரம் ஒன்றினை கடக்கும் தூரம் எனலாம். வேகம் என்பது ஒவ்வொரு இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபாடும். அறிவியல் முறைப்படி, வேகம் என்பதில் பல வகைகள் உள்ளது.  கணநேர வேகம், சராசரி வேகம், தொடலி வேகம் இதுபோன்று வேகத்தின் வகைகள் நிறைய உள்ளது.

செருக்கு என்பதன் வேறு சொல் என்ன.?

வேகம் வேறு பெயர்கள்:

  • விரைவு
  • கதி 
  • சடிதி
  • சீக்கிரம்
  • துரிதம்
  • சட்டென
  • அவசரம்  
  • தீவிரம் 
  • சுறுசுறுப்பு 
  • ஈடுபாடு

மேலே கூறப்பட்டுள்ள சொற்கள் அனைத்தும் வேகம் என்ற சொல்லினை குறிக்கும் வேறு சொற்கள் ஆகும்.

வேகம் தொடர்பான வாக்கியங்கள்:

  • வாகனத்தில் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • அரசு விரைவு பேருந்து வேகமாக செல்லும்.
  • வேலையை விரைந்து செய்து முடி.
  • உங்கள் இலக்குகளை அடைவதில் தீவிரமாக இருங்கள்.

வேகம் எதிர்ச்சொல்:

வேகம் என்பதன் எதிர்சொல் மெதுவாக/தாமதம் என்பதாகும்.

வேகம் in English:

  • Velocity
  • Speed
  • Quickness
  • Rapidity
  • Sprint
  • Vigour
  • Haste
  • Celerity
  • Speediness

வேகம் என்பதை ஆங்கிலத்தில் இவ்வாறு கூறுவார்கள். பெரும்பாலும், வேகம் என்பதை ஆங்கிலத்தில் Speed என்று தான் கூறுவார்கள்.

சவுகரியம் என்பதன் வேறு சொல்.!

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement