விதி வேறு சொல் | Vidhi Veru Sol
இந்த உலகத்தில் பிறந்த மனிதர்கள் முதல் பறவைகள், விலங்குகள் என இவ்வாறு பல உயிரினங்கள் இருந்து கொண்டு தான் உள்ளது. இவ்வாறு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம் பிறப்பு என்பது ஒன்று இருப்பது போல கண்டிப்பாக இறப்பு என்பதும் இருக்கிறது. அந்த வகையில் இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலமே நமக்கான காலமாக இருக்கிறது. ஆகவே அத்தகைய குறுகிய காலத்தில் நம்மால் எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ முடியுமோ அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக வாழ வேண்டும். நாம் பேசி கொண்டிருக்கும் போதே ஏதாவது கஷ்டம் என்று வந்தால் எல்லாம் விதி என்று கூறுவோம். இந்த விதி என்ற வார்த்தைக்கான வேறு சொற்கள் என்று இருக்கும். அதனை பற்றி நமக்கு தெரியாது. அதனால் தான் இந்த பதிவில் விதி என்பதற்கான வேறு சொற்களை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.
விதி என்றால் என்ன.?
நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் சந்தோஷமான நிகழ்வுகள் நடந்தால் அதனை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டோம். அதுவே கஸ்டமான நிகழ்வுகள் எல்லாம் என்னோட விதி என்று கூறுவதை கேட்டிருப்போம். ஏன் நாம் கூட இந்த வார்த்தையினை கூறியிருப்போம்.
விதி என்பது ஒரு செயலை மாற்ற முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்த விதியை கூட மதியால் வெல்லலாம் என்ற பழமொழி இருக்கிறது. ஆனால் அதனை மாற்றுவதற்கான ஸ்டெப்களை யாரும் எடுக்க மாட்டார்கள். நடப்பது எல்லாம் விதியே என்று கூறி கொண்டே நகர்ந்து விடுவார்கள். இதனை சில எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.
- அரசாங்கம் ஆனது புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
- சாலையை விதிகளை மீற கூடாது.
- எல்லாம் என் தலைவிதி
விதி வேறு பெயர்கள்:
விதி என்ற வார்த்தையினை பல்வேறு வார்த்தைகளால் அழைக்கலாம். அதனை பற்றி கீழே பார்த்து அறிந்து கொள்வோம்.
- முன்னரே தீர்மானிக்கப்பட்ட நியதி
- நியதி
- ஊழ்
- ஒழுங்குமுறை
- விதிமுறை
- கட்டுப்பாடு
- விதித்தல்
- அமுல்படுத்தல்
Vithi in English:
விதி என்ற வார்த்தையினை ஆங்கிலத்தில் fate, rule, destiny, doom, kismet, preceptive, statute இந்த வார்த்தைகள் மூலம் அழைக்கலாம்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |