விரிச்சி கேட்டல் என்றால் என்ன.?

Advertisement

விரிச்சி கேட்டல் பொருள் | Virichi Kettal in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் விரிச்சி கேட்டல் என்றால் என்ன.? என்பதை படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக, தமிழில் உள்ள பல வார்த்தைகளுக்கான அர்த்தம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. தமிழில் ஒரு சில வார்த்தைகள் தூய தமிழில் இருப்பதால், அதாவது அக்காலத்தில் மக்கள் பயன்படுத்திய சொல்லாக இருப்பதால், அதனை பற்றி நமக்கு தெரிவதில்லை.

குறிப்பாக, சங்க இலக்கிய நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல பாடல்கள் மற்றும் தலைப்புகளுக்கான விளக்கம் பற்றி புரிந்துகொள்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். அவற்றில் ஒன்றுதான் இந்த விரிச்சி கேட்டல். விரிச்சி கேட்டல் என்பதே வித்தியாசமானதாக இருக்கிறதே என்று நாம் அனைவருமே குழம்பி இருப்போம். சில வார்த்தைகளை பார்த்தவுடனே அல்லது படித்தவுடன் இதற்கு இதுதான் அர்த்தமாக இருக்கும் என்று எண்ணிவிடுவோம். ஆனால், இந்த விரிச்சி கேட்டல் என்பது அவ்வாறு இல்லையே என்று தானே எண்ணி கொண்டிருக்கிறீர்கள். ஓகே வாருங்கள் விரிச்சி கேட்டல் பற்றி தெரிந்துகொள்வோம். விரிச்சி கேட்டல் என்பது தமிழ்ச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ஒரு செயல் அல்லது நிகழ்வாகும்.

ஊடல் என்றால் என்ன அர்த்தம்.?

விரிச்சி கேட்டல் என்பது என்ன.? 

ஒரு காரியத்தை செய்ய கிளம்பும் முன், யாரோ ஒருவர் நல்லவிதமாக பேசுவது, நம் காதில் விழுந்தால் நல்லது என்று நினைப்போம் அல்லவா.. அதுதான் விரிச்சி கேட்டல். அதாவது,  விரிச்சி கேட்டல் என்பதை நற்சொல் கேட்டல் என்று விளக்குவார்கள்.நல்ல சகுனமாக ஒரு நற்சொல்லைக் கேட்பது விரிச்சி கேட்பது ஆகும். 

விரிச்சி என்பது வாயிலிருந்து வரும் சொல் என்னும் பொருள் கொண்டது. அதாவது, முன் பின் தெரியாத ஒருவரிடமிருந்து வாயில் இருந்து வரும் சொற்களைக் கேட்டு அதற்குப் பொருள் கொள்வது விரிச்சி என்பர்.

நாம் ஏதேனும் ஒரு செயலை, நல்லபடியாக முடியவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும்போது, யாரோ ஒருவன் பக்கத்தில் உள்ளவரிடமோ அல்லது போனிலோ நல்லவிதமாக கவலை படாதே எல்லாம் நல்லதாக நடக்கும், நல்லபடியாக முடியும் என்று இதுபோன்ற நல்ல விதமான சொற்களை பேசிக்கொண்டிருந்தால், அதனை கேட்டதும் நம் மனதில் ஒரு மகிழ்ச்சி நம்பிக்கை வரும். இதுதான் விரிச்சி கேட்டல்.

தெய்வத்தை வணங்கி நற்சொல் கேட்டு நிற்றலை விரிச்சி கேட்டல் என்பர்.

விரிச்சி கேட்டல் இருந்ததை முல்லைப்பாட்டு உணர்த்துகிறது. முல்லை நில பெண்களிடம் விரிச்சி கேட்டல் பழக்கம் இருந்ததை முல்லைப்பாட்டு மூலம் தெரிந்துகொள்ளலாம். 

தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி, பக்கத்து வீட்டுப்பெண் வேறு ஏதோ பொருளில் ‘அவன் இப்போதே வருவான்’ என்று சொன்ன சொல்லை நற்சொல்லாக (விரிச்சி) எடுத்துக் கொண்டு ‘தலைவன் வந்து விடுவான்’ என்ற நம்பிக்கையைத் தலைவிக்கு உருவாக்குகிறாள்.

இது போன்ற  தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement