விதை வேறு சொல் | Vithai Veru Sol in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் விதை என்பதன் வேறு சொல் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். விதை பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். விவசாயத்திற்கு மூலதனமே விதை தான். விதையின் மூலம் தான் ஒரு மரமோ அல்லது ஒரு செடியோ வளரும். ஒவ்வொரு தானியத்திற்கும் ஒரு விதை இருக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால் , விதை என்ற சொல்லுக்கான வேறு சொல் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவில் விதை என்றால் என்ன.? விதை வேறு சொல்.? என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.
விவசாயம் செய்யும் நெல், கோதுமை, கம்பு, சோளம் முதலிய பலவகை தானியங்களும் விதைகள் ஆகும். விதையின் பாதுகாப்பிற்காக அதன் வெளிப்புறத்தில் ஒரு உறை சூழ்ந்து இருக்கும். இது, வித்துறை அல்லது உமி என்று அழைக்கப்படுகிறது. இந்த விதை ஆனது, வேறொரு பெயரினாலும் அழைக்கப்படுகிறது. அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
ஜாக்கிரதை என்பதன் வேறு சொல் என்ன.?
விதை பொருள்:
தாவரங்கள் தன இனத்தை பெருக்கிக்கொள்ள தன்னுள்ளே உருவாக்கும் ஓர் தாவர அங்கம் விதை ஆகும். ஒரு விதையானது மூன்று பாகங்களை கொண்டிருக்கும். அவை, முளையம், வித்தகவிழையம் மற்றும் வித்துறை ஆகும். இவற்றில் முளையம் என்பது முதிர்ச்சியடையாத இளம் தாவரமாகும். அடுத்து வித்தகவிழையம் என்பது, முளையமானது முளைத்து நாற்றாக வளரும்போது அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கும் பகுதி ஆகும். அதாவது, முளையத்தை சுற்றி உணவு சேமிக்கும் உறை ஆகும். இறுதியாக உள்ள வித்துறை என்பது, விதையின் பாதுகாப்பிற்காக அதனை சுற்றி இருக்கும் தடினமான உறை ஆகும். இந்த உறையானது சில தாவர விதைகளில் மிகவும் மெல்லிய தோல் போன்றும் இருக்கும்.
விதை வேறு பெயர்கள்:
விதை என்பதன் வேறு பெயர்/வேறு சொல் வித்து என்பதாகும். பெரும்பாலும் விதையை வித்து என்று தான் கூறுவார்கள்.விதை in English:
விதை என்பதன் ஆங்கிலப்பெயர் Seed ஆகும்.
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.