மனிதனின் மூளை எத்தனை கிராம் இருக்கும் தெரியுமா..?

Advertisement

Buman Brain Weight in Tamil | மனித மூளையின் எடை எவ்வளவு

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் ஒரு பயனுள்ளத் தகவலை தெரிந்து வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு மனிதனின் உடம்பில் மூளை, இதயம் என்று பல உறுப்புகள் இருக்கின்றன. நாம் என்ன செய்ய வேண்டும் என்று நம்மை இயக்க கூடிய ஒரு உறுப்பு என்றால் அது மூளை தான்.

மூளை தான் நம்மை இயக்குகிறது. அதுபோல ஒரு மனிதனின் மூளை எத்தனை கிராம் இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? சொல்லப்போனால் நம்மில் பலருக்கும் இதற்க்கான பதில் என்ன என்பது தெரியாது. எனவே, அதனை தெரிந்து கொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

மனித மூளை பற்றிய தகவல்கள்

Weight Of Human Brain in Tamil:

Weight Of Human Brain

ஒரு மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. நமது மூளையில் 100 பில்லியன் நரம்பு செல்கள் இருக்கின்றன. ஒரு மனிதனின் மூளையானது ஒரு நிமிடத்திற்கு 1,000 வார்த்தைகள் வரை படிக்கும் திறனை கொண்டுள்ளது.

மனித மூளையின் வளர்ச்சி 18 வயதில் நின்று விடும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது. மனிதனின் சிறு மூளையின் எடை 150 கிராம் என்றும் சராசரி மனித மூளையின் அகலம் 140 மி.மீ என்றும் சொல்லப்டுகிறது.

பெண்கள் மூளையை விட 10% ஆண்களுடைய மூளையானது பெரியதாக இருக்கும். ஆண்களின் மூளையானது கிட்டத்தட்ட 1274 கன செ.மீ அளவிற்கு இருக்கும். சராசரியாக பெண்களின் மூளையின் அளவானது 1131 கன செ.மீ அளவில் இருக்கும்.

 மனித மூளையின் வளர்‌ச்சி பிறக்கும் குழந்தைக்கு 340 கிராம் முதல் 400 கிராம் வரை இருக்கும். பின் பிறந்த குழந்தையின் 6 -வது மாதத்தில் 750 கிராம் வரை இருக்கும். 1 வயதில் 970 கிராம் அளவிலும், 2 வயதில் 1150 கிராம் அளவிலும், அதேபோல 3 வயதில் 1200 கிராம் அளவிலும் இருக்கும். மூளையானது ஒரு குழந்தையின் 6 வயதில் 1250 கிராமும் 9 வயதில் 1300 கிராம் அதேபோல 12 வயதில் 1350 கிராம் மற்றும் 20 வயதில் 1400 கிராம் என்று 12 ஆண்டுகளுக்கு பிறகு மூளை 8 ஆண்டுகள் வரை 50 கிராம் அளவிலேயே வளர்கிறது.  

 

மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கும் உங்களுக்கு தெரியுமா..?
ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 
Advertisement