எந்த வாகனத்திற்கு என்ன உரிமம் வேண்டும்..! ஓட்டுநர் உரிமங்களில் இவ்வளவு உள்ளதா..?

Advertisement

What Are Different Types of Licenses in Tamil

பொதுவாக அதிகளவு மக்களுக்கு ஓட்டுநர் உரிமை மட்டுமே தெரியும். அதில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று அதனை பற்றி அதிகளவு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். சிலருக்கு இருசக்கர வாகன உரிமம், நான்கு சக்கர வாகனம் மட்டுமே தான் தெரியும். மற்ற உரிமங்களை பற்றியும் அதனையுடைய ரூல்ஸ் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். சரி வாங்க அதனை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.

What Are Different Types of Licenses in Tamil:

முதலில் LLR உரிமம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 18 வயது நிறைவடைந்து வாகனம் உரிமம் பெறுவதற்கு வாகனங்கள் ஒட்டிக்கொண்டு இருக்கும் போது அப்ளை செய்து இந்த LLR ஆவணம் அளிப்பார்கள்.

அதன் பின் 30 நாட்கள் கழித்து தான் Licenses எடுக்கவேண்டும். இந்த Licenses மூன்று வகைகள் உள்ளது. அது Light License, Batch License, Heavy License என்று மூன்று உள்ளது.

Light License என்றால் என்ன?

Light மோட்டார் Way அதாவது நம்முடைய சொந்த கார், சொந்த பைக் என்று மோட்டார் வகைகளை குறிக்கும். இதனை நம்முடைய License பின்பக்கம் பதிக்கப்பட்டு இருக்கும். NT என்று பதிக்கப்பட்டு இருக்கும்.

அதேபோல் நம்முடைய License பின்பக்கம் எந்த மாதிரியான வாகனங்களை ஓட்டவேண்டும் என்பதை புகைப்படத்துடன் தெளிவாக அச்சிடப்பட்டு இருக்கும்.

நீங்கள் கீர் உள்ள வண்டிகளுக்கு உரிமம் எடுத்தால் License -ல் MCWG போடப்பட்டிருக்கும். கீர் இல்லாத வாகனம் என்றால் MCWOG என்பதை பதிக்கப்பட்டு இருக்கும்.

Light License 20 வருடம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் எந்த வயதுக்கு எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

வயது  எவ்வளவு நாட்கள்
30 வயது முதல் 50 வயதிற்குள் எடுத்தால்  10 வருடம் பயன்படுத்தலாம். 
51 வயது முதல் 55 வயதிற்குள் எடுத்தால்  60 வயது வரை பயன்படுத்திக் கொள்ளலாம். 
55 வயதிற்குள் மேல் உரிமம் வாங்கினால்  5 வருடம் தான் பயன்படுத்த முடியும். அதன் பின் அதனை புதுப்பித்துக் கொள்ளவும். 

 

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்  ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் பெறுவது எப்படி?

What is Batch License in Tamil:

இந்த Batch License பஸ் ஓட்டுவதற்கு உள்ள உரிமம் ஆகும். இதனை அப்ளை  செய்வதற்கு முன்பு Light License எடுத்து இருக்கவேண்டும். அதுபோல அப்ளை  செய்யும் நபரின் வயது 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

இதை எடுத்து விட்டால் T board வாகனம் என்று சொல்வார்கள். அதாவது மஞ்சள் போர்டு இருக்கும் அல்லவா அந்த வானங்களை ஒட்ட முடியும். அதிலும் நான்கு சக்கர வானங்களை தான் ஓட்ட முடியும். 6 சக்கர வாகனம் ஓட்டலாம். ஆனால் அது வண்டியின் நீல அகலம் பொறுத்து மாறுபடும்.

இந்த Batch License -க்கு 5 வருடம் பயன்படுத்த முடியும். அதன் பின் நாம் புதுப்பித்து கொள்ள வேண்டும்.

Heavy License in Tamil:

லாரி ஓட்டுவதற்கு அதன் பின் பெரிய வாகனங்கள் ஓட்டுவதற்கு இந்த Heavy License தேவைப்படும். நாம் Batch License எடுப்பதற்கு LLR எடுக்கவேண்டும். மற்ற வாகனங்கள் எடுக்க வேண்டும் என்று எந்த ஒரு ரூல்ஸ் இல்லை. Light License வைத்தே இந்த Batch License எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் Heavy License எடுக்க Heavy LLR என்பது போடவேண்டும். அதேபோல் வண்டியை ஓட்டுவதற்கு  உங்களுக்கு 6 மாதம் காலம் நேரம் கொடுப்பார்கள். அதற்குள் ஒட்டி காட்டி உரிமம் பெற்றுக் கொள்ளமுடியும்.

அதேபோல் இந்த Heavy License வைத்து அனைத்து வானங்களும் ஓட்டிக்கொள்ள முடியும். 10 சக்கர வாகனங்கள் ஒட்டக்கூட முடியும். இதற்கும் 5 வருடம் வரை பயன்படுத்த முடியும்.

ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கெமிக்கல் மற்றும் அபாயகரமான பொருட்களை ஏற்றி செல்வதற்கு முடியாது. அதற்கு என்று தனி உரிமம் உள்ளது. இது தான் Light License, Batch License, Heavy License உரிமங்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். ஆகவே இது தெரிந்துகொண்டு வானங்கள் உரிமம் எடுக்கவும்.

ஏற்றுமதி உரிமம் பெறுவது எப்படி?

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 

 

Advertisement