What Causes Volcanoes To Erupt
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் ஒரு பயனுள்ள தகவலை கூறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அது வேறவொன்றும் இல்லை எரிமலை வெடிக்க காரணம் என்ன என்ற சுவாரஸ்யமான தகவலை தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது தெரியுமா |
எரிமலை பற்றிய தகவல்:
சரி யாரெல்லாம் எரிமலையை நேரில் பார்த்திருக்கிறீர்கள். பொதுவாக நாம் அனைவருமே எரிமலையை டிவியில் தான் பார்த்திருக்கின்றோம். ஆனால் எரிமலை பற்றிய தகவலை இங்கு பார்ப்போம்.
எரிமலை என்பது பூமியின் மேற்பரப்பில் ஒரு திறப்பு ஆகும். அதாவது, ஒரு மலையில் காணப்படும், திறப்பு வாயு, சூடான மாக்மா மற்றும் சாம்பல் ஆகியவை பூமியின் மேலோட்டத்திற்கு அடியில் இருந்து வெளியேற அனுமதிக்கிறது. இதை தான் நாம் எரிமலை என்று சொல்கின்றோம்.“எரிமலை” என்ற வார்த்தை ரோமானிய பெயரான “வல்கன்” என்ற பெயரில் இருந்து வந்தது என்று சொல்லப்படுகிறது.
மாக்மா என்பது எரிமலைக்குள் இருக்கும் சூடான திரவப் பாறைக்கு வழங்கப்படும் பெயர் ஆகும். அது எரிமலையை விட்டு வெளியேறியவுடன் எரிமலைக்குழம்பு என்று அழைக்கப்படுகிறது.
நிலத்தில், ஒரு டெக்டோனிக் தட்டு மற்றொன்றின் கீழ் நகரும் போது எரிமலைகள் உருவாகின்றன. அதாவது ஒரு மெல்லிய, கனமான கடல் தட்டு ஒரு தடிமனான கண்டத் தட்டுக்கு அடியில் செல்கிறது அல்லது நகர்கிறது. இது நிகழும்போது கடல் தட்டு மேலடுக்கில் மூழ்கிவிடும். இது தான் எரிமலையாக உருவாகிறது.
👉 மாம்பழம் என்ற பெயர் எப்படி வந்தது இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா
எரிமலை வெடிக்க காரணம் என்ன..?
சரி எரிமலை ஏன் வெடிக்கிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் அதற்கான விடை இங்கு உள்ளது.
பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் வெப்பம் நகர்வதால் எரிமலை வெடிக்கிறது. அதாவது மாக்மாவில் வாயு குமிழ்கள் உருவாகும் போது எரிமலைக்குள் அழுத்தம் உருவாகிறது. மாக்மா என்பது பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள சூடான திரவ பாறை. எரிமலையின் உள்ளே இருக்கும் வாயு குமிழ்கள் வெளியேற வேண்டும். அதனால் தான் எரிமலை வெடிக்கிறது.
மயில் என்ற பெயர் வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |