கண்ணாடியின் உண்மையான நிறம் என்ன உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

What Color Is The Glass in Tamil

ஹலோ நண்பர்களே..! பொதுநலம் வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பயனுள்ள பதிவாக இந்த பதிவு இருக்கும். நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை தான் இன்றைய பதிவில் கூறப் போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். சரி கண்ணாடியின் உண்மையான நிறம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் வாயிலாக அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள் இல்லையென்றால் பிரச்சனை ஆகும்

கண்ணாடியின் வரலாறு என்ன..?

கண்ணாடியின் வரலாறு என்ன

பொதுவாக கண்ணாடி அனைத்து வீடுகளிலும் இருக்கிறது. கண்ணாடி இல்லாத வீடுகளே இருக்க முடியாது. கண்ணாடி என்று சொன்னதும் நம் நினைவிற்கு கண்ணாடியால் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் வரும். சரி கண்ணாடியின் வரலாறு உங்களுக்கு தெரியுமா..?

மனித வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே கண்ணாடி ஒரு மதிப்புமிக்க பொருளாகக் கருதப்படுகிறது. கற்காலத்தில் ​​பிளின்ட் நாப்பர்கள் (Flint Knappers) மிகவும் கூர்மையான கத்திகளை உருவாக்க இயற்கையாக நிகழும் கண்ணாடியான அப்சிடியனைப் பயன்படுத்தினார்கள்.

முதன் முதலில் எகிப்து நாட்டில் கிமு 1500 ஆம் ஆண்டு தான் கண்ணாடி தயாரிப்பதற்கான வழிமுறைகள் கொண்டுவரப்பட்டன. மேலும் கண்ணாடிகள் ஒரு காலத்தில் மிகவும் அரிதான மற்றும் மதிப்புமிக்க பொருளாக இருந்தது.

கண்ணாடிகள் சிலிக்காவை அதிக வெப்பத்தில் மற்ற இரசாயனங்களுடன் கலப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

செல்வவளம் பெருக முகம் பார்க்கும் கண்ணாடியை இந்த இடத்தில் வைத்து பாருங்கள்..!

கண்ணாடியின் நிறம் என்ன..? 

கண்ணாடியின் நிறம் என்ன

உங்களிடம் கண்ணாடியின் நிறம் என்ன என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள். இதற்கான பதில் அனைவருக்கும் ஒரு குழப்பமாகவே இருக்கும். சிலர் கண்ணாடி வெள்ளை அல்லது வெள்ளி நிறம் என்று சொல்வார்கள்.

ஆனால் கண்ணாடியின் நிறம் வெள்ளையா அல்லது வெள்ளியோ கிடையாது. காரணம் வெள்ளை நிறம் ஒலிகளை வெவ்வேறு திசைகளில் சிதறடிக்கிறது. ஆனால் ஒரு கண்ணாடி அனைத்து நிறங்களையும் சமமாக பிரதிபலிக்கிறது. கண்ணாடியில் நாம் எந்த நிறத்தை பார்த்தாலும் அதே நிறத்தை தான் பிரதிபலிக்கும்.

 ஆனால் கண்ணாடியின் உண்மையான நிறம் பச்சை என்று சொல்லப்படுகிறது. கண்ணாடிகள் சோடா சுண்ணாம்பு, சிலிக்கான் மற்றும் வெள்ளி பொருட்களின் மூலக்கூறுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இந்த கலவைகள் அனைத்து கண்ணாடிக்கு பச்சை நிறத்தை கொடுக்கிறது.  

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 
Advertisement