ஒரே டூத் பிரெஷை பல மாதங்களுக்கு பயன்படுத்தும் நபரா நீங்கள்.. அப்போ இதை தெரிந்துக்கோங்க..!

Advertisement

What Happens if You Use a Toothbrush Too Long in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நாம் சாப்பிடும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி அந்த உணவு பொருளின் காலாவதி தேதியை (Expiry Date) சரி பார்ப்போம். அப்பொழுது தான் அந்த உணவு பொருளை எத்தனை நாட்கள் வரை நாம் பயன்படுத்தலாம் என்பதை அறிந்துகொள்ள முடியும். அதற்கு மேல் நாம் அந்த உணவு பொருளை பயன்படுத்தினோம் என்றால் கண்டிப்பாக அதனை சாப்பிடும் நமக்கு பல வகையான உடல் உபாதைகள் தான் ஏற்படும். அந்த வையில் நாம் தினமும் பற்களை சுத்தம் செய்யக்கூடிய டூத் பிரசிற்கும் கால அவகாசம் என்று இருக்கிறது. இது தெரியாமல் பல வருடத்திற்கு ஒரு முறை கூட அவர்கள் பயன்படுத்தும் பிரஷை மாற்ற மறந்துவிடுகின்றன. இதனால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அறிவதில்லை. சரி இந்த பதிவில் ஒரே டூத் பிரெஷை பல மாதங்கள் பயன்படுத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி படித்தறியலாம் வாங்க.

எத்தனை நாட்களுக்கு ஒருமுறை டூத் பிரெஷ்ஷை மாற்ற வேண்டும்..?

What Happens if You Use a Toothbrush Too Long

உண்மையிலேயே எந்தவொரு டூத் பிரெஷ்ஷிற்கும் எந்தவிதமான காலாவதி தேதியும் கிடையாது. ஆனால் நீங்கள் அதைத் திறந்து பயன்படுத்தத் தொடங்கியவுடன், உங்கள் டூத் பிரெஷ்ஷின் வாழ்க்கை சுழற்சி 3 முதல் 4 மாதங்கள் வரை மட்டுமே ஆகும். அதற்கு பிறகு, குறிப்பிட்ட டூத் பிரெஷ்ஷால் பல் துலக்கினாலும் கூட அது உங்கள் பற்களை சரியாக சுத்தம் செய்யாது.

பழைய பிரஷையே தொடர்ந்து பயன்படுத்தினால், பற்களில் படிந்துள்ள கரைகள் முழுவதுமாக அகற்றப்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக தான் இருக்கும்.

பழைய பிரஷ் மூலம் நன்றாக சுத்தம் செய்யப்படாத பட்சத்தில், வாய் துர்நாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டாகும். இத்தகைய அறிகுறிகள் வரும் பொழுது பழைய டூத் பிரஷை மாற்ற வேண்டும் என்று நீங்கள் உறுதி செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷில் முட்கள் ஒழுங்கற்ற நிலையில் சிதைந்து இருந்தால் டூத் பிரஷை மாற்ற வேண்டும் என்ற அறிகுறிகளாக எடுத்து கொள்ளவும்.

வீட்டில் உள்ளவர்கள் கடும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் வீட்டில் உள்ள மற்ற அனைவரும் டூத் பிரஷை மாற்றி கொள்வது நல்லது.

நீங்கள் பயன்படுத்தும் டூத் பிரஷை மற்றவர்கள் யாராவது தவறுதலாக மாற்றி பயன்படுத்திவிட்டார்கள் என்றால் நீங்கள் புதிய டூத் பிரஷை மாற்றி கொள்வது மிகவும் அவசியம்.

பழைய பிரெஷ்ஷில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் வளர்ந்து விட்ட பிறகு, அதைக்கொண்டு உங்கள் பற்களை நீங்கள் சுத்தம் செய்வதன் மூலம் உங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கணவன் மனைவி இடையே வயது வித்தியாசம் அதிகம் இருப்பது சரியா? தவறா?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement