அக்மார்க் என்றால் என்ன ..? இது எதுக்கு சொல்றாங்க தெரியுமா..?

Advertisement

What is Agmark Certification in Tamil

நண்பர்களே உங்களுக்கு ஒரு வார்த்தைக்கான அர்த்தம் என்ன, இது எதற்கு தேவைப்படுகிறது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். அப்படி என்ன வார்த்தை என்றால்  அக்மார்க் தங்கம் என்றால் என்ன  இது வெறும் வார்த்தையா..? என்பதை பற்றி தான் இந்த பதிவு இருக்க போகிறது.

பொதுவாக நம் வீட்டில் யாரையாவது திட்டுவது அல்லது யாரையாவது புகழ்வது தான் பெரும்பாலான வீட்டில் நடப்பது. அப்படி நம் வீட்டில் யாரையாவது மற்றவர்களுக்கு நல்ல விதமான சொல்ல வேண்டுமென்றால் உடனே அவர்கள் சொல்வார்கள்,  அக்மார்க் தங்கம் இந்த தம்பி என்பார்கள். இது என்ன வார்த்தை என்று நினைப்பீர்கள். ஒரு சிலர் இது தங்கத்திற்கு மட்டும் பயன்படுத்தும் வார்த்தை என்றும் அல்லது இது பொருள் என்றும் சிலர் நினைப்பீர்கள். ஆனால் இதற்கு உண்மையான அர்த்தம் வேறு தான். அது என்ன என்பதை பற்றி தான் இந்த பதிவு..!

What is Agmark Certification in Tamil:

அக்மார்க் முத்திரை என்றால் என்ன அக்மார்க் முத்திரை எதற்கு அது எதனை குறிக்கிறது.

AG – என்ற வார்த்தை Agriculture வார்த்தையோடு சுருக்கம்.

MARK – என்ற வார்த்தைக்கு Certification Mark என்று பொருள்படும். அதாவது சான்று.

Directorate of Marketing and Inspection என்ற அமைப்பு Ministry of Agriculture and Farmers Welfare என்கின்ற அமைப்புகு கீழ் இயங்குகிறது. இது தான் அக்மார்க் முத்திரையை தேன், நெய், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள், கோதுமை, மைதா, சோயாபீன்ஸ் என 200 –க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களுக்கு வழங்குகிறது.

இந்த முத்திரை உள்ள அனைத்து பொருட்களையும் வாங்கித் தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய பொருட்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அக்மார்க் சான்றிதழை வாங்கிக் கொள்ளலாம்.

இது வியாபாரிகளுக்கு அவர்களுடைய நிறுவனத்தை உயர்த்தவும், அதேபோல் ஏற்றுமதியில் வெளிநாட்டுக்கு போகும் போதும் இது உதவியாக இருக்கும். அதேபோல் இந்த அக்மார்க் முத்திரை அந்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த உதவியாக உள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள்👉👉 ஆப்பிள்-ல எதுக்கு இந்த ஸ்டிக்கர் ஓட்டுறாங்க தெரியுமா..?

இது போன்ற Learn பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  Learn 
Advertisement