ஜாமீன் என்றால் என்ன | What is Bail in Tamil
பொதுவாக இந்த ஜாமீன் என்ற வார்த்தையை பற்றி தெரியும். ஆனால் அது என்னது எப்படி கொடுப்பார்கள் என்று அதனை பற்றிய முழு விவரம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். ஆகவே இந்த ஜாமின் நிறைய உள்ளன. அதனை பற்றியும் அதன் பிறகு முன் ஜாமின் என்றால் என்ன என்பதை பற்றியும் இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
ஜாமீன் என்றால் என்ன..?
குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை தற்காலிகமாக விடுவிப்பதை பிணை அல்லது ஜாமின் அல்லது BAIL என கூறலாம். அதாவது குற்றம் சாட்டியவர் காவல்துறை துறை பாதுகாப்பு அல்லது நீதிமன்றக் காவலில் இருக்கும் போது வழக்கறிஞர் உதவியுடன் 2 நபர்கள் கையெழுத்திட்டு உத்திரவாதம் அளித்தால் ஜாமீன் ஆகும். அதன் பின்பு வழக்குகளை விசாரித்து அதன் பின்பு தீர்ப்பு அளிக்கிறது. ஜாமினில் 2 வகைகள் உள்ளது முன் ஜாமீன், இடைக்கால ஜாமீன் என்ற பிரிவுகள் உள்ளன.
இடைக்கால ஜாமீன் என்றால் என்ன..?
இடைக்கால ஜாமீன் என்றால் முன் ஜாமீன் மற்றும் வழக்கமான ஜாமீன் குறித்து முடிவெடுப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படும் போது, தற்காலிகமாக கொஞ்சம் காலம் ஜாமீன் வழங்குவது இடைக்கால ஜாமீன் ஆகும். அதன் பின்பு தான் ஜாமீன் வழங்கப்படுகிறது.
முன் ஜாமீன் என்றால் என்ன..?
முன் ஜாமீன் என்றால் இங்கு பாதி பேர் நினைப்பது என்னவென்றால் குற்றம் செய்வதற்கு முன் ஜாமீன் வாங்கி வைக்கலாம் என்கிறார்கள். ஆனால் அது அப்படி இல்லை. தப்பு செய்வதற்கு முன்பு என்பதை விட அரெஸ்ட் ஆகுவதற்கு முன்பு என்று கூறலாம்.
முன் ஜாமின் ஆங்கிலத்தில் Anticipatory Bail என்பார்கள். இப்போ ஒரு குற்றம் நடக்கிறது என்றால், அந்த குற்றத்தில் உங்களையும் கைது செய்வார்கள் என்று பயம் கொண்டால், நேரடியாக அமர்வு நிதி மன்றம் என்கிற இடத்திற்கு சென்று அங்கு 1 வக்கீல் 2 பேர் உத்திரவாதம் தந்து கையெழுத்துயிடுவதற்கு இவர்கள் அனைவரையும் அழைத்து சென்று எனக்கு ஒரு முன் ஜாமீன் வேண்டும் என்று ஒரு பெட்டிஷன் போடலாம்.
அங்கு உங்களுக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்டது என்றால் உயர் நிதி மன்றத்திற்கு சென்று பெட்டிஷன் போட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் கைது செய்யாமல் இருக்க இந்த முன் ஜாமீன் வழங்கப்படுகிறது.
இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Learn |