பிட் காயின் பற்றி தெரியுமா உங்களுக்கு?

Bitcoin

பிட் காயின் பற்றிய தகவல்கள்

வணக்கம் பொதுநலம்.காமின் அன்பான நேயர்களே. தினமும் புதிதான  நல்ல நல்ல தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கும் நேயர்களே. இன்று நம் பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். வாங்க நண்பர்களே என்ன தகவல் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம். அப்படி என்ன தகவல் என்று தானே யோசிக்கிறீர்கள். இன்று நாம் பிட் காயின் பற்றி தான் பார்க்கப்போகிறோம். பிட் காயின் என்றால் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இன்று நாம் இதை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம்..

பிட் காயின் என்றால் என்ன? | Bitcoin Meaning in Tamil 

Bitcoin Meaning in Tamil 

உலகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். பணம் காலப்போக்கில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை அறிவோம். அந்த காலகட்டத்தில் பண்டமாற்று முறை இருந்தது. அது போல் மக்கள் பொருட்களுக்கு பொருள் மாற்றிக்கொண்டனர். அதன் பின் நாணயம் கொண்டுவரப்பட்டது. தங்கம், வெள்ளி, பித்தளை, போன்றவற்றை நாணயங்களாக பயன்படுத்தினர்.

சிபில் ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்

காலப்போக்கில் இந்த நாணயங்களை பயன்படுத்துவது ஒரு கஷ்டமான விஷயமாக இருந்தது. அதன் காரணமாக காகித பணம் கொண்டுவந்தோம். இதை நாம் இன்றும் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். அடுத்த கட்டமாக பணம் வேறு முறைக்கு மாறிவிட்டது. வங்கி வரைவு, காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என்று இது போன்று மாறிவிட்டது. இதனால் இன்று நம்மில் பலபேர் பணத்தை கையால் கூட தொடுவதில்லை.

பிட் காயின் என்பது ஒரு குறியாக்க நாணயம். இது பொதுவாக நாம் பயன்படுத்தும் டாலர், ருபாய், யூரோ போன்று காகிதத்தால் செய்யப்பட்டது அல்ல. பிட் காயின் கணினியில் இயங்கும் ஒரு மென்பொருள் ஆகும். UPI, Net Banking என்று நாம் டிஜிட்டலாக மாறி போய்க்கொண்டிருக்கிறோம்.

Bitcoin Meaning in Tamil 

 

இவை எல்லாவற்றிற்கும் முன்னிலையாக உள்ளது வங்கி தான். எல்லா பரிவர்த்தனைக்கு வங்கி ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இது போன்ற பிரச்சனைகள் இல்லாமல் எப்படி இருப்பது. பொதுவாக நாம் பயன்படுத்தும் பணம் ஒரு வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டு மேலாண்மை செய்யப்படுகிறது. பிட் காயினுக்கு இது போன்ற மைய அதிகாரிகள் தேவையில்லை.

பிட் காயின் ஒரு கணினியில் செயலாக்கப்பட்டு, அந்த வலையத்தளத்தில் உள்ளவர்களே பிட் காயினை மேலாண்மை செய்து கொள்ளலாம். பிட் காயின் தோன்றுவதற்கு முன்பு பல மின்காசு தொழில் நுட்பங்கள் இருந்தன. பிட் காயின் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ல் “bitcoin.org” என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டது.

கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? – Cryptocurrency Meaning in Tamil 

cryptocurrency

இதில் பிட் காயின் போன்று அதிகம் உள்ளது. இவை எல்லாமே வங்கி இல்லாத டிஜிட்டல் நாணயங்கள் தான். இதனுடைய எல்லா கட்டுப்பாடுகளும் உங்களிடம் உள்ளது. இப்பொழுது நாம் பிட் காயின் என்று சொல்வது கிரிப்டோகரன்சி-யை தான். பிட் காயின் என்பது கிரிப்டோகரன்சியில் ஒரு பிரபலமான நாணயமாகும்.

கிரிப்டோகரன்சி என்பது ஒரு விதமான பணம் அவ்வளவு தான். இதை யாரும் கட்டுப்படுத்தவில்லை. இதை மாற்ற வேண்டுமென்றால் ஒரு வங்கி தேவையில்லை. ஆனால் கிரிப்டோகரன்சி என்றால் பணம் மட்டுமல்ல அதில் நிறைய விஷயங்கள் அடங்கியுள்ளது. இது எப்படி வேலை செய்கிறது, இது பாதுகாப்பானதா? என்று அதிக கேள்விகள் இருக்கும்.

நகை கடன் வட்டி கணக்கிடுவது எப்படி

பிளாக்செயின் தொழில்நுட்பம்:

நாம் பார்த்த பிட் காயின் கிரிப்டோகரன்சியில் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பிளாக் செயின் தொழில்நுட்பமானது பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. Blockchain என்பது பல்வேறு இடங்களில் பராமரிக்கப்படுகின்ற பரிவர்த்தனை கணக்குப்புத்தகம் என்று கூறப்படுகிறது.

உதாரணமாக: நாம் வங்கியில் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனை குறித்த தகவல்கள் அனைத்தும் வங்கியின் சர்வரில் சேமிக்கப்பட்டு இருக்கும். ஆனால் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் பல்வேறு இடங்களில் ஒரேவிதமான தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும். ஒரு பரிவர்த்தனை நடக்கும் போது குறித்த விவரங்கள் “Block” ஆக அனுப்பப்படும். 

பிட் காயினில் Blockchain தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்தபடுகிறது:

Blockchain தொழில்நுட்பம் கிரிப்டோகரன்சியான பிட் காயின் தொழில்நுட்பத்தில் தான் பயன்படுத்தப்படுகிறது. RBI என்கிற இந்திய அரசு நம் நாட்டை பொறுத்தவரையில் தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய பணத்தை உருவாக்குகிறது. இது போல பல நாடுகளில் அந்த நாடுகள் சேர்ந்த அமைப்புகள் தங்கள் நாட்டுக்கென பணத்தை உருவாக்கிக்கொள்கின்றன.

ஒரு கணினியில் உள்ள தகவல்களை யாராவது ஹேக் செய்துவிட்டால் பிற கணினிகளில் இருக்கும் தகவல்களுடன் ஒப்பிட்டு பார்க்கபடும். எனவே Blockchain தொழில்நுட்பம் என்பது பல்வேறு இடங்களில் ஒரேவிதமான தகவல்களை தான் சேமித்து வைத்திருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

Blockchain தொழில்நுட்பம் 3 விதமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

  1. Hash
  2. Proof of Work
  3. Distributed Network
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil