What is CSR Copy in Tamil
இன்றைய பதிவில் நாம் அனைவரும் கண்டிப்பாக அறிந்துகொள்ளவேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தகவல் என்றால் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் CSR என்றால் என்ன என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள இருக்கின்றோம். அது என்னடா CSR என்று நீங்கள் சிந்திப்பது புரிகின்றது. அதனால் தான் இன்றைய பதிவில் CSR பற்றிய முழு தகவல்களையும் பார்க்க இருக்கின்றோம். அதாவது CSR காவல் நிலையங்களில் எதற்காக பதிவு செய்யப்படுகிறது. எந்தெந்த குற்றங்களுக்காக பதிவு செய்யப்படுகிறது போன்ற தகவல்களை தான் தெரிந்துகொள்ள இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
இதையும் படியுங்கள்=> முதல் தகவல் அறிக்கை FIR என்றால் என்ன
CSR Full Form in Tamil:
CSR என்பது Community Service Register என்று ஆங்கிலத்திலும், சமுதாய சேவை பதிவேடு என்று தமிழிலும் கூறப்படுகிறது. இது இந்திய காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் தினசரி பதிவேடு அறிக்கை ஆகும்.
What is CSR Copy in Tamil:
சமூக சேவை பதிவேடு என்பது ஒவ்வொரு இந்திய காவல் நிலையத்திலும் அடையாளம் காண முடியாத குற்றத்திற்காக பராமரிக்கப்படும் ஒரு பதிவேடு ஆகும்.
அதாவது ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கும் பொழுது காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேவையற்ற வழக்காக இருப்பதாக நினைத்து.
இதையும் படிங்கள் =>காவல்துறை புகார் கடிதம் மாதிரி
அந்த புகார் அளித்த மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரரை அழைத்து பேசி சமாதானபடுத்தி அனுப்புவார். இப்படிப்பட்ட புகார்களுக்கு சாட்சியாக கூறப்படும் ரசீது அல்லது பதிவேடு தான் CSR எனப்படும்.
மேலும் இது தினசரி டைரி அறிக்கை அல்லது டைரி அறிக்கை என்றும் அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்கள் => நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி
CSR-ல் பதிவு செய்யப்படும் குற்றங்கள்:
உதாரணமாக குழாயடி சண்டைகள், பக்கத்து வீட்டுக்காரருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்படும் தகராறு மற்றும் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்படும் இடத்தகராறு போன்ற புகார்கள் இந்த CSR-ல் பதிவு செய்யப்படுகிறது.
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |