இந்தியாவில் உருவாகியுள்ள டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன..? What is Digital Rupee in Tamil
What is E Rupi in Tamil – இந்தியாவில் இரண்டு நாட்களுக்கும் முன் இந்திய அரசங்களாம் டிஜிட்டல் ரூபாய் என்றா ஒன்றை அறிவித்துள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். முழுமையான தகவலை தெரிந்துகொள்ள பதிவை தொடர்ந்து படியுங்கள்.
மத்திய அரசாங்கத்தின் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அறிமுகம் செய்தது தான் இந்த டிஜிட்டல் ரூபாய். டிஜிட்டல் ரூபாய் என்றவுடன் மக்களுக்கு எழும் மிக பெரிய குழப்பம் என்னெவென்றால் சாதாரண ரூபாக்கும், டிஜிட்டல் ரூபாக்கும் உள்ள வித்தியாசம் என்ன?, பிட் காயின் போன்ற கிரிப்டோ கரன்சியை இந்திய அரசாங்கமே அறிமுகம் செய்துள்ளதா என்று மக்களின் மனதில் அதிக கேள்விகள் எழுந்துள்ளது. இனி பணத்தை டிஜிட்டல் ரூபாயாக மாற்றி வைத்துக்கொள்ள வேண்டுமா?, Bank Account-க்கு இனி பணத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமா? என்ற கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் மக்களிடையே இருக்கிறது. அதுகுறித்து இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன..? | What is E Rupi in Tamil
நாம் இப்பொழுது கையில் 100 ரூபாய் 200 ரூபாய் என்று வைத்துள்ளோம் அல்லவா அதனுடைய டிஜிட்டல் வடிவம் என்று முதலில் நாம் புரிந்துகொள்வோம். அதற்கு முன் பணம் என்பது என்ன? பணத்தின் மதிப்பு எங்கிருந்து வருகிறது என்பதை பற்றி நாம் அறிய வேண்டும்.
பணம் எப்படி மதிப்பிடப்படுகிறது?
அந்த காலத்தில் பண்டமாற்ற முறை இருந்தது ஒரு பொருளின் மதிப்பை பொறுத்து, அதற்கு நிகரான மதிப்புள்ள பொருட்களை பண்டமாற்ற முறையில் பொருட்களை வாங்கின.
அதன்பிறகு அந்த பண்டமாற்ற முறை மாறி ஒரு தாளை கொடுத்து அந்த தாளிற்கு 100 ரூபாய்க்கான மதிப்பு இருக்கிறது. ஆக அந்த 100 ரூபாய் மதிப்புகள் பொருட்களை நாம் வாங்கிக்கொள்ளவும் முடிகிறது. இந்த பணத்திற்கு மதிப்பு எங்கிருந்து வருகிறது என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா.
ஒரு 100 ரூபாய் நோட் தயார் செய்வதற்கு அதாவது அச்சிட்டு தயார் செய்வதற்கு ஆகும் செலவு உதாரணத்திற்கு 5 ரூபாய் தான் இருக்கும். இருப்பினும் இந்த நூறு ரூபாய் பணத்திற்கு மதிப்பு எப்படி கிடைக்கிறது என்றால் நமது இந்திய நாட்டின் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் அதில் கையொப்பம் இடுகிறார், இந்த நோட்டிற்கு 100 ரூபாய்க்கான மதிப்பை ரிசர்வ் வங்கி உறுதியேற்கிறது என்று கையெழுத்திடப்படுகிறது, ஆக அதன் பிறகு தான் அந்த பணத்திற்கு மதிப்பு கிடைக்கிறது.
இ-ரூபாயும் என்பது கிரிப்டோகரன்சியா?
பிட் காயின் என்பது அரசு உத்தரவு அளிக்காத ஒரு கரன்சி ஆகும். இது தனியாரால் உருவாக்கப்பட காய்ந்த தான் பிட் காயின், உலகில் எங்கிருந்தோ, எந்தெந்த நாடுகளில் இருக்குடிய அனைவரும் இணைத்து உருவாக்கப்பட்ட காயின் கிரிப்டோ கரன்சி ஆகும். அதனை மக்கள் ஏற்றுக்கொண்டு பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றன. இருப்பினும் இதற்கு எந்த ஒரு அரசாங்கமும் அங்கீகாரம் தரவில்லை.
ஆனால் இ-ரூபாய் என்று இந்திய அரசால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் ரூபாய் என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆன்லைன் கரன்சி ஆகும். மற்ற கரன்சிக்கும் தற்பொழுது இந்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் கரன்சிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. மற்ற கரன்சிக்கு எந்த ஒரு உத்தரவாதமும் இருக்காது. ஆனால் டிஜிட்டல் ரூபாய்க்கு இந்த அரசு உத்தரவாதம் கொடுக்கிறது.
டிஜிட்டல் ரூபாய்:
நாம் பயன்படுத்தும் ருப்பையன் டிஜிட்டல் வடிவம் இ-ரூபாய் ஆகும். அதாவது நாம் வைத்திருக்கும் 1 ரூபாய் என்பது டிஜிட்டல் ரூபாயில் 1இ ரூபாய்க்கு சமமாகும்.
உதாரணத்துக்கு:
நாம் ATM-யில் இருந்து 500 ரூபாயை எடுத்து நமது மணிபர்சில் வைத்து செலவு செய்கிறோம். ஆனால் இந்த டிஜிட்டல் ரூபாய் என்பது, நாம் வங்கியில் வைத்திருக்கும் பணத்தை அப்படியே ஆன்லைன் வடிவமாக (டிஜிட்டல் ரூபாய்) மாற்றிக்கொண்டு, அதனை ஆன்லைன் மூலமாகவே செலவு செய்யும் முறை தான் டிஜிட்டல் ரூபாய் ஆகும். அதாவது paytm, OLA money இவற்றில் பணத்தை வைத்து செலவு செய்வது போல. இந்த டிஜிட்டல் ருப்பையிலும் பணத்தை வைத்து செலவு செய்துகொள்ளலாம்.
இ-ருப்பைக்கு வங்கியில் வட்டி கிடைக்குமா?
வங்கியில் வைத்தால் அந்த பணத்திற்கு வட்டி கிடைக்கும். ஆனால் இந்த இ-ரூபாய் என்பது வெறும் ஆன்லைன் கரன்சி மட்டும் தான் இதற்கு வட்டி கிடைக்காது. ஆன்லைன் மூலமாக செலவு செய்துகொள்ள மட்டும் தான் முடியும்.
டிஜிட்டல் ரூபாயின் பயன்கள் என்ன?
வெளிநாடுகளில் பணிபுரிந்து டிஜிட்டல் பணமாக சம்பளம் பெறுபவர்கள் இதன்மூலமாக குறைந்த கட்டணத்தில் தங்கள் உறவினர்களுக்கோ அல்லது பிற நாடுகளில் வசிப்பவர்களுக்கோ பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க முடியும். இதன் காரணமாக வெளியில் பணம் அனுப்பும் செலவு, பாதிக்கும் மேல் குறையும் என்று நம்பப்படுகிறது.
டிஜிட்டல் ரூபாய் மூலம் கள்ள நோட்டு, கருப்புப் பணம் போன்றவற்றை முழுமையாக நீக்க முடியும். இதேபோல் பணம் எங்கு, யாரிடம் இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட பணம் யாரிடம் இருந்து வந்தது என்பது போன்ற அனைத்து விஷயத்தையும் ஆர்பிஐ நொடியில் தெரிந்துகொள்ள முடியும்.
Gpay, Phonepay மாதிரி இருக்கிறது என்று நீங்கள் நினைத்தாலும் இந்த Gpay, Phonepay மூலமாக நீங்கள் மற்றவர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்தற்கு நமக்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் கூட வங்கிகளுக்கு நிறைய பிராசஸ் இருக்கிறது. அதனை பிளாக் செய்வதற்காகத்தான் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது/
இந்த டிஜிட்டல் ரூபாயை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று எந்த ஒரு கட்டாயம் இல்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் பணத்தை டிஜிட்டல் ரூபாயாக மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |