இசிஜி மற்றும் எக்கோ டெஸ்ட் என்றால் என்ன?

Advertisement

இசிஜி மற்றும் எக்கோ டெஸ்ட் என்றால் என்ன? What is ECG and ECHO Test in Tamil

பொதுவாக நமது உடலில் மிக மிக முக்கியமான உறுப்பாக பார்க்கப்படுவது முதலில் இதயத்தை தான். நமது உடலில் இதயத்துடிப்பானது சீராக இருக்கும் வரைதான் நாம் நம் உடலில் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் இருக்க முடியும். இல்லையென்றால் பலவகையான இன்னல்களை நாம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். நமது உடலில் ஓயாமல் வேலை செய்யும் ஒரே உறுப்பு இதயம் தான் இந்த இதயத்தில் ஏற்படும் நோய்களும் பல அதாவது  மாரடைப்பு இதய செயலிழப்பு, இதயதுடிப்பின் எண்ணிக்கையில் ஏற்றம், இறக்கம்,மூச்சு திணறல், இதயத்திலிருக்கும் வால்வு களில் உண்டாகும் பிரச்சனை, தமனி நோய் (கரோனரி) உயர் இரத்த அழுத்தம் போன்றவை. இவை தவிர வெகுசிலருக்கு பிறப்பிலியே இதயத்தின் அளவு சிறியதாக இருப்பதும் உண்டு. இத்தகைய நோய்களை வரும் காத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் நமக்கு அதிக செலவையோ அல்லது உயிரிழப்பையோ ஏற்படுத்திவிட்டு சென்றுவிடும்.

இதன் அறிகுறிகளையும் உபாதைகளையும் அலட்சியப்படுத்தும் போது ஒன்று அதிகப்படியான செலவுகளையோ அல்லது உயிரையோ பறித்துவிடுகிறது. முறையான பரிசோதனை மூலம் இதய நோயை முன்கூட்டியே கண்டறியலாம் என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். இத்தகைய பரிசோதனைக்கு பெயர்தான் ECG மற்றும் ECHO பரிசோதனைகள் ஆகும். இந்த பரிசோதனை முறையை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க இசிஜி மற்றும் எக்கோ டெஸ்ட் என்றால் என்ன? என்பதை பற்றி அறிவோம்.

இசிஜி (ECG) என்றால் என்ன?

 

ECG test

ECG – இதய மின் அலை வரைவு (Electro Cardio Gram)

தொடர்ச்சியாக ஒருவருக்கு நெஞ்சுவலி பாதிப்பு இருக்கும் போது இசிஜி கருவியில் இருக்கும் மின் குமிழ்கள் நோயாளியின் கைகள், கால்கள் மற்றும் நெஞ்சு பகுதியில் பொறுத்தி இசிஜி கருவியுடன் இணைத்து இதயத்தில் உண்டாகும் மின் மாற்றங்களை பரிசோதனை செய்வார்கள்.

இந்த பரிசோதனையின் போது இதயம் துடிக்கும் போது இதயத்தில் ஏற்படும் மிக நுண்ணிய மின் மாற்றங்களை ஆயிரம் மடங்கு பெரிதுபடுத்தி அவற்றை படமாக மாற்றி முடிவை அளிக்கும். இந்த பரிசோதனை முடிவில் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை துல்லியமாக தெரிவிக்கும். இதை கொண்டு இதயத்தில் அது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை கண்டறியலாம்.

ஆஞ்சியோ சிகிச்சை என்றால் என்ன?

எக்கோ டெஸ்ட் என்றால் என்ன?

echo test

  • ECHO – இதய மின் ஒலி அலை வரைவு (Echo Cardio Gram)

இதய அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் எக்கோ இதயப் பரிசோதனை நோயாளிக்கு செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முறையானது உணவுக் குழாயின் வழியாக ஒரு மெல்லிய குழாயின் முனைப் பகுதியில் “அல்ட்ரா சவுண்ட் ட்ரான்ஸ் டியூசர்’ என்ற கருவியை செலுத்தி, எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு இந்த பரிசோதனையை செய்வதன் மூலம் பாதிப்புள்ள இதயத்தின் முக்கியப் பகுதிகளை தெளிவாகக் காணமுடிகிறது. இதனால், அறுவை சிகிச்சை எளிதாக செய்யமுடிகிறது. இதய செயல்பாட்டையும் துல்லியமாகக் கணிக்கமுடிகிறது. மேலும், இச்சோதனை இதய மேல் அறைகளில் உள்ள ரத்தக் கட்டியையும் கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.

இது, இதய அறுவை சிகிச்சை மயக்கவியல் நிபுணர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக, ஒரு சில நோயாளிகளுக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சையுடன் கூடிய இதய வால்வு கோளாறுகளுக்கான அறுவை சிகிச்சை முடிவுகளை தெளிவாக எடுக்க முடிகிறது. அறுவை சிகிச்சை ஆபத்துகளின்போது ஏற்படும் மரணத்தைத் தடுக்க, இப்பரிசோதனை பெரிதும் உதவுகிறது

இந்த ECG மற்றும் ECHO பரிசோதனைகளால் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை நடவடிக்கைகள எடுக்கப்பட்டு எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.

ஆகவே 30–35 வயதிற்கு மேல் அனைவரும் இப்பரிசோதனைகளை கட்டாயம் செய்து கொள்வது மிகவும் சிறந்தது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement