குண்டர் என்றால் என்ன | Kundar Law Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே இப்போது நாம் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சட்டத்தை பற்றி பார்க்க போகிறோம். இந்த சட்டத்தை பற்றி இப்பொழுது நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி கேள்விக்கு பட்டாலும் அதனை பற்றிய விவரங்களையே பற்றி உங்களுக்கு தெரிந்து இருந்தால் நல்லது. அப்படி தெரியவில்லை என்றால். இந்த பதிவில் குட்டர் சட்டம் என்றால் என்ன? இவற்றில் யாரை கைது செய்வார்கள் என்பதை பற்றி இன்று பொதுநலம்.காம் தெளிவாக விளக்குகிறது.
இந்திய தண்டனை சட்டம் 420 |
Goondas Act in Tamil:
- குட்டர் சட்டம் என்பது சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் கடத்தல்செய்பவர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், வனச்சட்டத்தை மீறுபவர்கள், திருட்டு வீடியோ குற்றவாளிகள், திருட்டுத்தனமாக திரைப்படங்களை சி.டி-க்களில் பதிவு செய்யும் குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ என்பது ஆகும்.
- இந்த இச்சட்டம் 1982 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் ஆட்சியில் போது இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் அதிகாரத்தில் மூலம் சிறையில் அடைக்க முடியும்.
- மாவட்ட ஆட்சியார்களும் கிராமப்புறத்தில், நகர்ப்புறங்களில் காவல்துறை கண்காணிப்பாளரும் இந்த சட்டத்தை செயல்படுத்த முடியும்.
- இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16,17, 22 மற்றும் 45 ஆகிய பிரிவுகளின் குற்றம் செய்பவர்கள் அல்லது செய்யகூடிய குழுவின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்க பட்டாள் அவர்களை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்.
- குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சரியாக உள்ளதா என்பதையும் கைது செய்தது சரியா என்பதையும் நீதிபதி குழு உள்ளிட்டார் கொண்ட குழு முடிவுசெய்வார்கள்.
இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவு |
- நீதிபதிகள் குழு முடிவு செய்தால் அதன் பின் உயர் நீதிமன்றத்தை அடைந்து அதன் பின் நிவாரணம் பெற முடியும்.
- குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உறுதி செய்யபட்டால் அவர்களை 12 மாதம் சிறையில், அடைக்க முடியும். மாநில அரசு விருப்பினால் முன்கூட்டியே 12 மாதத்திற்குள் விடுதலை செய்ய முடியும்.
- குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர் அந்த நிபந்தனைகளை மீறினால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்படும்.
- 2006 ஆம் ஆண்டு திரையுலகினர் வேண்டுகோள்ளை நிறைவேற்றப்பட்டு. திரைப்படத்தை திருட்டுத்தனமாக எடுப்பது, சி.டி.க்களில் பதிவு செய்து விற்பனை செய்பவர்களை இந்த சட்டத்தில் கைது செய்யலாம் என்பதை 2006 ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
குற்றமில்லை என்று நிரூபிக்க முடியுமா.!
இந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்படும் ஒருவர், தன்மீது தப்பு இல்லை என்று நிரூபிக்க விரும்பினால் கைதானவர் சார்பில் வழக்கறிஞர் வாதாட முடியாது. அவர் சார்பாக அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான், முறையீட்டு குழுவைத்தான் அணுக வேண்டும். இந்த விசாரணை குழுவானது, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்டு அமைக்கப்படும். இந்த குழுவினர் விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டது சரியா என்பது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும். அதைத்தொடர்ந்து அவர் மீதான நடவடிக்கை எடுப்பார்கள்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |