What is the First Information Report in Tamil!
வணக்கம்! நம்முள் யார் என்ன குற்றம் செய்தாலும் காவல்துறையானது கைது செய்து வழக்கு பதிவு செய்கிறது. அவற்றுள் சில குற்றங்களுக்கு காவல்துறை FIR பதிவு செய்கிறது? சில குற்றங்களுக்கு FIR பதிவு செய்வதில்லை? அது எந்தெந்த குற்றங்கள் என்று உங்களுக்கு தெரியுமா? குற்றம் புரிந்தவர் மீது எவ்வாறு FIR பதிவு செய்வது என பல கேள்விகள் உங்களுக்குள் எழலாம்? FIR குறித்த அடிப்படை கேள்விகளுக்கான விளக்கத்தை இப்பதிவில் விளக்கமாக தெரிந்துக்கொள்வோம்.
முதல் தகவல் அறிக்கை என்றால் என்ன?
FIR-இன் விளக்கம் ஆங்கிலத்தில் “First Information Report”. தமிழில் “முதல் தகவல் அறிக்கை” என்பதே இதன் விளக்கம். காவல் நிலையத்தில் காவலர் ஒரு குற்றம் குறித்து கிடைக்கும் முதல் தகவலைப் பெற்று எழுதப்படும் எழுத்து மூலமான ஆவணமாகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 154 இதுபற்றிக் கூறுகிறது.
குற்றவாளியினை கூண்டில் ஏற்றுவதற்கு முதல் நடவடிக்கையாக காவல் துறையால் எடுக்கபடும் முதல் நடவடிக்கை தான் முதல் தகவல் அறிக்கை பதிவு. முதல் தகவல் அறிக்கைப் பதிவு குற்றவழக்குப் புலனாய்வின் முதல் கட்டமாகும். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்ய முழு உரிமை உள்ளது.
பொதுவாக இந்திய குற்றவியல் நடைமுறைப்படி குற்றமானது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம், ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் என வகைப்படுத்தப்படுகிறது. கிரிமினல் வழக்கை FIR இல்லாமல் விசாரிக்க முடியாது என்பதால் நீதி பெற FIR என்பது முக்கிய செயல் முறையாகும்.
இதையும் படிங்கள் => நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி?
FIR பதிவு செய்யப்படும் குற்றங்கள்:
கொலை, பாலியல் குற்றம், வரதட்சணை சம்மந்தமான குற்றங்கள், ஆட்கடத்தல், தீருட்டு போன்ற குற்றங்கள் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களுக்குள் அடங்கும். இது போன்ற குற்றங்கள் புரிந்தவர் மீது FIR பதிவு செய்யபடுகிறது.
FIR பதிவு செய்யபட்ட குற்றவாளியினை கைது வாரண்ட் இல்லாமலே போலீசாரால் கைது செய்ய முடியும். மேலும் நீதிபதி உத்தரவு இன்றி குற்றவாளியினை விசாரிக்கவும் முடியும்.
FIR பதிவு செய்யப்படாத குற்றங்கள்:
தாக்குதல், மோசடி, ஏமாற்று குற்றங்கள் போன்ற குற்றங்கள் இதில் அடங்கும்.
ஜாமீனில் வெளிவர முடியாத குற்றத்தின் கீழ் குற்றவாளியினை கைது செய்ய கைது வாரண்ட் வேண்டும். மேலும் குற்றவாளியினை விசாரிக்க நீதிபதி உத்தரவு வேண்டும்.
காவல்துறைக்கு யாரெல்லாம் புகார் அளிக்கலாம்?
- குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்
- குற்றத்தினை பற்றி அறிந்தவர்
- குற்றத்தினை நேரில் கண்டவர் போன்றோர் காவல்துறைக்கு வாய்வழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ புகாரை அளிக்கலாம்.
- குற்றத்தினை நேரில் கண்ட காவல் அதிகாரி தானாகவே FIR பதிவு செய்யலாம்.
இதையும் படிங்கள் =>காவல்துறை புகார் கடிதம் மாதிரி
முதல் தகவல் அறிக்கையில்(FIR) பதிவு செய்யப்படும் தகவல்கள் என்ன?
- குற்றவாளியின் பெயர்
- குற்றவாளியின் முகவரி(தகவல் இருப்பின்)
- என்ன குற்றம் புரிந்துள்ளார்
- குற்றத்தின் தன்மை
- தேதி
- நேரம்
- இடம்
- எந்த அதிகார வரம்பிற்கு உட்டபட்டது
- சட்டத்தின் எந்த பிரிவு மீற பட்டது
போன்ற தகவல்கள் FIR-ல் பதிவு செய்ய்யப்படும்.
புகார் அளித்தவரின் உரிமைகள் என்ன?
- புகார் அளித்தவர்க்கு FIR பதிவு செய்தவுடன் அதன் நகலை பெற உரிமை உண்டு.
- ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட FIR பதிவு செய்ய முடியாது.
இதையும் படிங்கள் =>தமிழ்நாடு மின்சார வாரியம் புகார் எண்!
மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |