ரயிலில் பயணம் செய்யும் போது தண்டவாளத்தின் பக்கத்தில் ஏன் இந்த பெட்டி இருக்குனு தெரியுமா..?

Axle Counter Box On Railway Tracks in Tamil

Axle Counter Box On Railway Tracks 

ஹலோ பிரண்ட்ஸ்..! பொதுநலம் பதிவின் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு பயனுள்ள பதிவை கூறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள பதிவை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி உங்களுக்கு இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். பொதுவாக நம் அனைவருக்குமே ரயிலில் பயணம் செய்ய மிகவும் பிடிக்கும்.

அப்படி ரயிலில் செல்லும் போது பாதையில் ஆங்காங்கே ஒரு பீரோ மாதிரி பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த பெட்டி ரயில் பயணத்தின் போது பல இடங்களில் நாம் பார்த்திருப்போம். அப்படி பார்க்கும் போது இந்த பெட்டி ஏன் வைக்கப்படுகிறது, இதற்கு காரணம் என்ன என்று என்றாவது யோசித்தது உண்டா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். வாங்க நண்பர்களே அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.

ரயிலின் பின்புறத்தில் ஏன் இந்த குறியீடு இருக்குனு உங்களுக்கு தெரியுமா

Axle Counter Box On Railway Tracks in Tamil: 

Axle Counter Box

இரயிலில் பயணம் செய்யும் போது தண்டவாளத்தின் ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் இந்த பெட்டியை ஆக்ஸில் பாக்ஸ் கவுண்டர் (Axle Counter Box) என்று சொல்வார்கள். இந்த பெட்டிகள் ரயில் பாதையில் 3 அல்லது 5 கி.மீக்கு ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த பெட்டி ஏதோ ஒரு காரணத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த பெட்டி இரயில் பயணிகளின் உயிரை காப்பாற்றுவதற்காக வைக்கப்டுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா..? ஆனால் அது தான் உண்மை. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

 இந்த பெட்டிகள் தண்டவாளத்தில் செல்லும் ரயில் சக்கரங்களின் எண்ணிக்கையை அதாவது இரயில் பெட்டிகளை கணக்கிடுவதற்காக வைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயில் கிளம்புகிறது என்று வைத்து கொள்வோம். அந்த இரயிலில் மொத்தம் 15 பெட்டிகள் இருக்கின்றன. இந்த ரயில் அடுத்த இரயில் நிலையத்திற்கு செல்லும் போது அதே பெட்டிகளுடன் செல்கிறதா இல்லை இடையில் ஏதாவது ஒரு பெட்டி தனியாக கழன்றுவிடுகிறதா என்பதை கணக்கிடுவது தான் இந்த பெட்டியின் வேலை.  
ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா?

 

Axle Counter Box On Railway Tracks

அது எப்படி ஓரத்தில் இருக்கும் இந்த பெட்டி தண்டவாளத்தில் செல்லும் இரயில் பெட்டிகளை எப்படி கணக்கிடும் என்று கேட்பீர்கள். அந்த பெட்டியில் இருந்து ஒரு வயர் போன்ற கருவி தண்டவாளத்துடன் பொருத்தப்பட்டிருக்கும்.

அப்படி அந்த தண்டவாளத்தில் ரயில் செல்லும் போது ரயிலின் சக்கரங்கள் அந்த கருவியை அழுத்தும். அப்படி ரயில் சக்கரங்கள் எத்தனை முறை அந்த கருவியை அழுத்துகிறது என்ற கணக்கை இந்த பெட்டி கணக்கெடுக்கும்.

அதுபோல ரயில் நிலையத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஆக்ஸில் கவுண்டர் பெட்டி மற்ற பெட்டிகளை ரயில் கடப்பதற்கு முன்னரே ஆக்ஸில் கவுண்டர் பெட்டியில் எத்தனை சக்கரங்கள் வந்தது என்ற எண்ணிக்கையை அனுப்பி விடும்.

அதை வைத்து இந்த பெட்டியும் சக்கரங்களை கணக்கெடுக்கும். சக்கரங்கள் குறைவாக இருந்தால் உடனே இந்த பெட்டி Signal Control நிலையத்திற்குத் தகவல் அனுப்பும். இது தான் இந்த Axle Counter பெட்டியின் வேலை. இப்படி தான் இந்த Axle Counter பெட்டி இரயில் பயணிகளின் உயிரை காப்பற்றுகிறது..

ரயில் தண்டவாளத்தில் ஏன் கற்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn