விவரம் அல்லது விபரம் எது சரி
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். எனவே, அந்த வகையில் இப்பதிவில் நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் வார்த்தைகளில் ஒன்றான விவரம் அல்லது விபரம் என்பதில் எது சரியானது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நாம் அனைவருமே பெரும்பாலான இடங்களில் விவரம் என்றும், அல்லது விபரம் என்றும் எழுதியிருப்பதை பார்த்து இருப்போம். அந்நேரத்தில் இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் நமக்கு தோன்றியிருக்கும். எனவே, உங்களின் குழப்பத்தை போக்கும் வகையில் இப்பதிவு அமையும். அஃதாவது, இப்பதிவின் வாயிலாக விவரம் அல்லது விபரம் இவற்றில் எது சரியானது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Which is Correct Vivaram or Vibaram:
விபரம் மற்றும் விவரம் இவற்றில் எது சரியானது என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் பேச்சுவாக்கிலோ அல்லது எழுதும்போதோ நமக்கு ஒரு குழப்பம் இருக்கும். அதாவது, விவரம் என்பது சரியான சொல்லா அல்லது விபரம் என்பது சரியான சொல்லா என்ற குழப்பம் இருக்கும். இனி அந்த குழப்பம் இருக்காது. விவரம் விபரம் இவற்றில் விவரம் என்பதே சரியான சொல் ஆகும்.
கோவில் Vs கோயில்.. இதில் எது சரி உங்களுக்கு தெரியுமா..
விவரம்:
விபரம் என்ற சொல்லை காட்டிலும் விவரம் என்ற சொல் தான் சரியான சொல். ஏனென்றால் விவரம் என்ற சொல் சுத்தமான தமிழ் சொல் ஆகும். விவரம் என்றால் விவரித்துள்ள செய்திகள் என்று பொருள். ஆகையால், விவரம் என்றே சொல்லே சரியானது ஆகும்.
விபரம்:
விவரம் – வி என்றால் இல்லை என்றும், பரம் என்றால் மேலான பரம்பொருள் என்றும் பொருள்படும். எடுத்துக்காட்டாக, விநாயகர் என்ற பெயரில் வி என்பது இல்லை என்றும் நாயகர் என்பது தலைவனையும் குறிக்கிறது. அஃதாவது, விநாயகருக்கு மேல் பெரிய தலைவன் இல்லை என்று பொருள்.
Vivaram in English:
விவரம் என்பதை ஆங்கிலத்தில் DETAILS என்டர் கூறுவார்கள்.
Vivaram Meaning:
விவரம் என்றால் வரலாற்றுக் குறிப்பு, பகுத்தறிவு, மலைக்குகை ,துளை ,இடைவெளி உள்ளிட்ட அர்த்தங்களை குறிக்கிறது.
லஞ்சம் என்பதை இப்படியெல்லாம் கூட சொல்லலாமா..!
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |