ஒரு மனிதனின் உடலில் அதிக எடை கொண்ட உறுப்பு எது உங்களுக்கு தெரியுமா..?

Heaviest Organ in The Human Body

தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மனித உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. மனித உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளும் முக்கியமானது தான். அதுபோல மனிதன் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு எடையை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் மனிதனின் உடலில் அதிக எடை கொண்ட உறுப்பு எது என்று உங்களுக்கு தெரியுமா..? விடை தெரியாதவர்கள் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்..!

கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன..?

Which Is The Heaviest Organ In The Human Body in Tamil:

What is heaviest organ in the human body

ஒரு மனிதனின் உடலில் அதிக எடை கொண்ட உறுப்பு எது..?

விடை :  கல்லீரல் .

கல்லீரல் மனித உடலில் உள்ள மிகப்பெரிய உள் உறுப்பு ஆகும். ஓரு மனிதனின் உடலில் உள்ள மிகப்பெரிய அதிக எடை உள்ள உள் உறுப்பு கல்லீரல் தான்.  மனிதனின் உடலில் இருக்கும் கல்லீரலின் எடை தோராயமாக 3 – 3.5 பவுண்டுகள் அதாவது கல்லீரலின் எடை சுமார் 1500 கிராம் ஆகும்.  

கல்லீரலைப் பற்றிய ஆய்வு ஹெபடாலஜி (Hepatology) என்று அழைக்கப்படுகிறது. கல்லீரல் மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பி ஆகும். இது Hepatocytes எனப்படும் சிறப்பு உயிரணுக்களால் ஆனது.

மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கும் உங்களுக்கு தெரியுமா..?

 

இது மனித உடலில் மிகப்பெரிய வளர்சிதை மாற்ற உறுப்பு என்று சொல்லப்படுகிறது. கல்லீரல் அதிக அளவு கொழுப்பைச் சேமிக்கும் ஒரு உறுப்பாக செயல்படுகிறது. அம்மோனியா மற்றும் யூரியா கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கல்லீரல் மனித உடலின் வேதியியல் ஆய்வகம் என்று அழைக்கப்படுகிறது. 

கல்லீரல் உங்கள் விலா எலும்பு மற்றும் நுரையீரலுக்கு அடியில் மற்றும் உங்கள் அடிவயிற்றின் மேல் வலது பகுதியில் அமைந்துள்ளது. உங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி அகற்றவும், பித்தத்தை உற்பத்தி செய்யவும் கல்லீரல் செயல்படுகிறது.

கல்லீரல் இரத்த பிளாஸ்மாவிற்கு புரதங்களை உருவாக்குகிறது.
சேமிப்பிற்காக அதிகப்படியான குளுக்கோஸை கிளைகோஜனாக மாற்றவும்
இரத்த உறைதலை நிர்வகிக்கவும் கல்லீரல் செயல்படுகிறது. அதனால் தான் உடலில் அதிக எடை கொண்ட உறுப்பாக கல்லீரல் செயல்படுகிறது.

ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?
மனிதனின் தலையில் ஒரு மாதத்திற்கு எவ்வளவு முடிகள் வளரும் தெரியுமா.?

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn