ஏன் குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Why Do Babies Cry After Birth

குழந்தைகள் இருக்கும் வீடு சொர்க்கம் என்றே சொல்லலாம். குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. எவ்வளவு சோகமாக இருந்தாலும் குழந்தைகளை கண்டால் அவை அனைத்தும் பறந்து விடும். என்ன குழந்தைகளை பற்றி பேசுகிறோம். இது என்ன பதிவு என்று யோசிப்பீர்கள். பிறந்த குழந்தைகள் பற்றிய சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். தினமும் இந்த பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே பதிவை படிக்க தொடங்குவோம்.

தனித்துவமான குழந்தைகள் பெயர்கள்..!

குழந்தைகள் பிறந்தவுடன் அழுவது ஏன்..?  

குழந்தைகள் பிறந்தவுடன் அழுவது ஏன்

குழந்தைகளின் மொழி அழுகை என்று சொல்லலாம். பொதுவாக பிறந்தவுடன் குழந்தைகள் அழுவார்கள். அது நம் அனைவருக்குமே தெரியும். ஏன் அப்படி அழுகிறது என்று உங்களுக்கு தெரியுமா.?

குழந்தை பிறந்தவுடன் கட்டாயம் அழவேண்டும். அழவில்லை என்றால் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அதனால் தான் மருத்துவர்கள் குழந்தை பிறந்தவுடன் அதை அழ தூண்டி விடுகிறார்கள்.

 குழந்தைகள் பிறந்தவுடன் அழுதால் தான் அதன் நுரையீரல் வேலை செய்ய தொடங்குகிறது. பிறந்த குழந்தை அழ தொடங்கும் போது அதன் மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக இயங்க தொடங்குகிறது. அதுமட்டுமில்லாமல் முதல் சுவாச செயல்பாட்டிற்காக தான் குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.  
மனிதனின் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கும் உங்களுக்கு தெரியுமா..?

 

அதுபோல, ஒவ்வொரு குழந்தையும் தன் தாயின் கருவைரையில் இருக்கும் போது, அந்த தாயின் இதயத்துடிப்பின் சத்தத்தை தான் கேட்டு கொண்டிருப்பார்கள்.

அந்த பத்து மாதமும் இதயத்துடிப்பின் சத்தத்தில் தான் உறங்கிக் கொண்டிருப்பார்கள். திடிரென்று அந்த சத்தம் கேட்கவில்லை என்றாலும் குழந்தைகள் அழுவார்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் குழந்தை அழும் போது அதை தாயின் இதயத்துடிப்பின் பக்கத்தில் சாய்த்து கொள்கிறார்கள்.

 ஒரு குழந்தை பிறக்கும் போது அதன் உடலில் இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கை சராசரி மனிதனின் உடலில் இருக்கும் எலும்புகளை விட 60 எலும்புகள் அதிகமாக இருக்கும். அது குழந்தைகள் வளர வளர அந்த எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேர்த்துவிடும் என்று சொல்லபடுகிறது.  
ஒரு மனிதனின் உடலில் எத்தனை நரம்புகள் உள்ளன..?
ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

 

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 
Advertisement