யானை பாகன் கையில் இருப்பது.?

Advertisement

Yanai Pagan Kaiyil Irupathu

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் யானை பாகன் கையில் வைத்திருக்கும் பொருளின் பெயர் என்ன என்பதை (Yanai Pagan Kaiyil Vaithirupathu) பின்வருமாறு கொடுத்துள்ளோம். யானை என்றால் ஒரு சிலருக்கு பிடிக்கும், ஒரு சிலருக்கு பிடிக்காது. சிலர் யானையை பார்த்தாலே பயந்து ஓடி விடுவார்கள். ஒரு சிலர் யானையை பார்த்ததும் யானையிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்போதெல்லாம் பெரும்பாலான குழந்தைகள் யானையை பார்க்க தான் விரும்புகிறார்கள். சரி விஷயத்துக்கு வருவோம்.

யானையை பாத்துப்பதற்கும், அதனை கட்டுப்படுத்தி வழிநடத்தி அழைத்து செல்வதற்கும் இருக்கும் நபரை பாகன் என்று கூறுவார்கள். இவர், யானைக்கு தேவையான உணவு, இருப்பிடம் அனைத்தும் அளித்து கூடவே இருந்து பத்து கொள்வார். இவர் யானையை கட்டுப்படுத்த கையில் ஒரு பொருளினை வைத்து இருப்பார். நாம் அனைவருமே அதனை பார்த்து இருப்போம். ஆனால், அதன் பெயர் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். ஓகே வாருங்கள் பாகன் கையில் வைத்திருப்பது என்ன என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.

யானை வேறு பெயர்கள்

Yanai Pagan Kaiyil Vaithirupathu | யானை பாகன் கையில் இருப்பது:

யானை பாகன் கையில் இருப்பது

யானை பாகன் என்பவர், யானையை பராமரித்து, அதன் மேல் ஏரி சவாரி செய்து யானையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பயிற்சியாளர் ஆவர்.

யானை பாகன் கையில் வைத்திருக்கும் பொருளின் பெயர் அங்குசம் ஆகும். இது முள்ளிலான கம்பி ஆகும். யானையை வழிநடத்துவதற்காக ஒரு சிறிய முள்ளிலான கருவியை பாகன் பயன்படுத்துகிறார்கள்.  யானையை பயிற்றுவிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் சங்களிக்கள், அங்குசம் போன்ற கருவிகளை பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில், குறிப்பாக கேரளா மாநிலத்தில் யானைகளை கட்டுப்படுத்த பாகன்கள் மூன்று வகையான கருவிகள்/சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். ஒன்று தோட்டி (கொக்கி). இது 3.5 அடி நீளமும் 1 அங்குல தடிமனும் கொண்டது. இரண்டாவது வலிய கோல் (நீண்ட கோல்). இது 10.5 அடி நீளமும், 1 அங்குல தடிமனும் கொண்டது. மூன்றாவதாக சிறுவ கோல்.

யானையோ உருவத்தில் மிகவும் பெரியது. ஆனால், அதனை கட்டுப்படுத்தும் பாகன் மிகவும் சிறிய மனிதன். யானையின் ஒரு கால் அளவிற்கு கூட இருக்க மாட்டார் பாகன். ஆனால், அவர் கையில் இருக்கும் அங்குசத்தை கொண்டு யானையை கட்டுப்படுத்தி வழி நடத்தி செல்கிறார்.

யானை மேல் இருக்கும் இருக்கையின் பெயர்:

யானை பாகன், சில சமயங்களில், யானையின் மீது வைத்துள்ள அம்பாரியில் சவாரி செய்வார்கள். அம்பாரி என்பது யானையின் மீது அமர்ந்து வசதியாக செல்ல இருக்கையுடன் அமைக்கப்பட்ட மாடம் ஆகும். இதனை howdah என்று கூறுவார்கள்.

மன்மதன் கையில் இருப்பது என்ன தெரியுமா..?

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement