ஏமாற்றுதல் என்பதன் வேறு சொல் என்ன.?

Advertisement

ஏமாற்றுதல் வேறு சொல் | Yematruthal Veru Sol

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஏமாற்றுதல் என்பதன் வேறு சொல் (Yematruthal Veru Sol) என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். இவ்வுலகில் ஏமாற்றத்தால் துன்புறுபவர்கள் தான் அதிகம். ஏமாற்றம் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதிகமாக ஆசை வைக்கும் பொருள்/நபர் நமக்கு இல்லையெனும் போது அந்த வலியை தாங்கிக்கொள்ள முடியாது. ஆனால், இப்போதெல்லாம், அணைத்து வகையிலும் ஏமாற்றம் தான் அதிகமாக இருக்கிறது.

சரி விஷயத்துக்கும் வருவோம். ஏமாற்றம் என்பதை ஏமாற்றுதல் என்று கூறுவார்கள். அப்படி ஏமாற்றுதல் என்பதை வேறு எப்படியெல்லாம் கூறலாம் என்பதை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஏமாற்றுதல் என்ற வார்த்தை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், அதற்கு வழங்கப்படும் வேறு சொற்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.

ஏமாற்றுதல் என்பதன் வேறு சொல்:

  • வஞ்சகம்
  • வஞ்சித்தல்
  • ஏமஞ்செய்தல்
  • கபடம்
  • மர்மம்
  • சூழ்ச்சி
  • தந்திரம்
  • நயவஞ்சகம்

ஏமாற்றுதல் என்பதை, வஞ்சகம், கபடம், மர்மம், சூழ்ச்சி மற்றும் தந்திரம் என்று கூறுவார்கள். அதேபோல், ஏமாற்றம் செய்பவர்களை அதாவது, ஏமாற்றுபவர்களை துரோகி, வஞ்சகன், பாதகன்,வேடதாரி மற்றும் மோசக்காரன் என்று கூறுவார்கள்.

வஞ்சித்தல் – வஞ்சித்தல் என்றால் ஏமாற்றுதல் அல்லது மோசடி செய்வதல் ஆகும்.

துரோகி – கூடவே இருந்துகொண்டு, நம்பிக்கையை மீறி ஏமாற்றுபவர்களை துரோகி என்று கூறுவார்கள்.

வஞ்சகன் – ஏமாற்றும் தன்மையுடையவனை வஞ்சகன் என்று கூறுவார்கள்.

பாதகன் – தீங்கான செயல்களில் ஈடுபடும் நபரை பாதகன் என்று கூறுவார்கள்.

மோசக்காரன் – மோசம் செய்வதில் சிறந்தவர்.

வேடதாரி – வேறு முகம் எடுத்துக்கொண்டு ஏமாற்றுதல் செய்பவர்கள்.

புதல்வன் என்பதன் வேறு பெயர்கள் என்ன.?

ஏமாற்றுதல் என்றால் என்ன.?

ஏமாற்றுதல் என்பது உண்மைக்குப் புறம்பான தகவலை பல நபர்களை நம்ப வைப்பதாகும். துரோகம் செய்வதும் தீங்கு செய்வது தான் ஏமாற்றத்தில் வரும். அதேபோல், துரோகம் செய்யும் நபரை அல்லது தீங்கு விளைவிக்கும் நபரை ஏமாற்றுக்காரன் என்று சொல்வார்கள். இவ்வுலகில் ஏமாற்றுக்காரர்கள் தான் அதிகம். அவர்களின் சுயநலத்திற்கு ஏற்ப பல இடங்களில் ஏமாற்றம் செய்கிறார்கள்.

தன்னைச் சற்றியுள்ளவர்கள் ஏமாற்றுகிறார்களென கூறிக் கொண்டே,
நம்மில் பலர் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமே

ஏமாற்றுதல் திருக்குறள்:

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற- தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார்.

பொருள்:

நம்பிக் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில் ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான்

சூழ்ச்சி என்ற சொல்லுக்கான வேறு சொற்கள்

இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement