வெரும் 10 நிமிடத்தில் நிரந்தரமாக அனைத்து வெள்ளை முடிகளும் கருமையாக மாறும் அதிசயம் ஹேர் டை – Almond Hair Dye in Tamil
அனைவரது மனதிலும் வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண்ணம் வரும். ஆனால் வெள்ளை முடி வருவதற்கான உண்மையான காரணம் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது.
அதுமட்டுமல்லாமல் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்தகைய காரணங்கள் சரியாக தெரியாததால் தான், இளமையிலேயே வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த வெள்ளை முடியை நாம் இயற்கையான முறையில் வீட்டில் இருந்தபடி சரி செய்யலாம், ஆக எக்காரணம் கொண்டும் கடைகளில் விற்பனையாகும் ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். அது எப்படி இயற்கையான முறையில் ஹேர் டையை சரி செய்ய முடியும் என்று யோசிக்கிறீங்களா.. அப்படின்னா இந்த பதிவு உங்களுக்கானது. இங்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் தயார் செய்ய கூடிய ஹேர் டையை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க அந்த ஹேர் டை எப்படி தயார் செய்ய வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
பாதாம் ஹேர் டை தயார் செய்ய தேவையான பொருட்கள்:
- கருஞ்சீரகம் – இரண்டு ஸ்பூன்
- பாதாம் – ஐந்து
- மருதாணி பவுடர் – இரண்டு ஸ்பூன்
- ஓமவல்லி இலை – 15
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் தலையில் உள்ள அனைத்து நரைமுடியும் கருமையாக மாற கடுகு எண்ணெய்யுடன் இதை மட்டும் கலந்து தடவுங்க போதும்..!
பாதாம் ஹேர் டை செய்முறை:
அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் ஐந்து பாதாமை சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் வறுக்கவும்,
அதன் பிறகு அதனுடன் இரண்டு ஸ்பூன் கருஞ்சீரகத்தை சேர்த்து ஒரு 10 நிமிடம் வறுக்க வேண்டும்.
இவ்வாறு வறுத்த பிறகு அதனை நன்கு ஆறவைத்து பின்பு மிக்சி ஜாரில் சேர்த்து பொடிதாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அதே மிக்சி ஜாரில் 15 ஓமவல்லி இலையை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
அரைத்த ஓமவல்லி இலையை வடிகட்டி சாறை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் வடிகட்டி வைத்துள்ள ஓமவல்லி இலை சாறினை ஊற்றவும், அதேபோல் அரைத்து வைத்துள்ள கருஞ்சீரகம் மற்றும் பாதாம் கலவையை சேர்த்து நன்றாக கிளறங்குங்கள்.
நன்றாக கிளறிய பிறகு அதனுடன் இரண்டு ஸ்பூன் மருதாணி பவுடரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
கலவையானது தலைக்கு அடிக்கும் பக்குவம் வரும் வரை கிளறிக்கொண்டே இருங்கள். அந்த பக்குவம் வந்த பிறகு அடுப்பை அனைத்து நன்றாக ஆறவிடவும்.
அறிய பிறகு அதனை தலையில் எங்கெல்லாம் வெள்ளை முடி இருக்கின்றதோ அங்கெல்லாம் நன்றாக அப்ளை செய்யுங்கள்.
பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் வரை காத்திருக்கவும், ஒரு மணி நேரம் கழித்து தலையை எப்பொழுது போல அலசவும்.
இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தாலே போதும் நரை முடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 கைப்பிடி அளவு வெங்காய தோல் மட்டும் போதும்.. நரைமுடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |