முடி அடர்த்தியாக வளர எண்ணெய் – Long hair growth tips in tamil
ஒருவருடைய உடல் தன்மைக்கேற்பவும், உடலின் தட்பவெப்ப தன்மைக்கும், இருப்பிடத்திற்கு, ஏற்றவாறு தான் முடி வளர்ச்சி, கருமை நிறம், அடர்த்தி, நீளமான கூந்தல், போன்றவை அமைகிறது. ஒருவருடைய முடியின் தன்மையை பொறுத்து அவர்களுடைய கூந்தல் பராமரிப்பு அவசியம். உப்பு தண்ணீரில் குளித்தல், பிளீச்சிங் கலந்த தண்ணீர் உபயோகித்தல், அதிக நேரம் தலை ஈரமாக இறுக்கமாக சுற்றி வைத்தல், தலையில் சிறு கட்டிகள் வருதல், எண்ணெய் பசை மற்றும் ஷாம்பூ வாசனை போகாமல் முடியை அலசுவது, பாலிஸ்டர் டவல்கள் பயன்படுத்துவது, மலசிக்கல், மாதவிடாய் நாட்களில் அதிகமாக உதிரும், இரத்த சோகை, இரத்த சம்பந்த வியாதி உள்ளவர்களுக்கு முடி அடிக்கடி கொட்டும், அதிக வெள்ளைப்போக்கு மற்றும் ஒழுங்கற்ற இரத்த போக்கு, மகப்பேறு காலங்களுக்கு பிறகு ஏற்படும் இரத்த இழப்பால் முடி உதிரும். பொடுகு தொல்லை, அதிக மன உளைச்சல், இரவில் அதிக நேரம் கண்விழித்தல், உடலில் சூடு அதிகமாகுதல், அடிக்கடி மாமிச உணவுகளை உட்கொள்வது, பிளாஸ்டிக் பாய் மேல் உறக்கம் போன்ற பல்வேறு காரணங்கள் முடி உதிர்வு பிரச்சனைக்கு இருக்கிறது என்று சொல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முடி உதிர்வை தடுக்க இயற்கை ஹேர் ஆயில் தயார் செய்யும் முறைகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மின்னல் வேகத்தில் தலைமுடி வளர வெறும் 3 பொருள் போதும்..!
கரிசலாங்கண்ணி எண்ணெய்:
ஒரு கையளவு கரிசலாங்கண்ணி இலையை பறித்து அதனை சுத்தமாக அலசி மிக்சி ஜாரில் சேர்க்கவும். பின் அதனை நன்கு கெட்டியாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயை காய வைத்து அதில் போட்டு சிடு சிடுப்பு அடக்கியதும் வடிகட்டி, இந்த எண்ணெயைத் தலை முடிக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும். முடியும் கருமையாக வளரும்.
மருதாணி பூ:
உடலுக்கு அதிக குளிர்ச்சி தரக்கூடியது மருதாணி ஆக அந்த மருதாணியில் பூக்கும் பூக்களை பறித்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணெயைத் தலைக்கு தடவி வந்தால் உடல் உஷ்ணம் குறையும். உடல் உஷ்ணத்தினால் முடி உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள் இந்த மருதாணி பூ எண்ணெயை தயார் செய்து கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
நெல்லிக்காய் எண்ணெய்:
நெல்லி கனியும் உடல் சூட்டை தனிக்கக்கூடிய ஒன்றாகும். அதிலும் பெரிய நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் பயன்பட கூடியது. ஆக நெல்லிக்காயை வெயிலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தடவி வர அல்லது தலையில் ஊறியதும் குளித்துவர முடி வளர்ச்சி அதிகாரம் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஊரே உங்க முடியை திரும்பி பார்க்கணுமா..? அப்போ இந்த எண்ணெயை தடவுங்க..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |