கரும்புள்ளி மறைய டிப்ஸ்
வணக்கம் பிரண்ட்ஸ்..! பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே சரும பிரச்சனைகள் மற்றும் தலைமுடி பிரச்சனைகள் வருவது இயற்கை தான். அதேபோல நாமும் அந்த பிரச்சனைகளை இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் மேலும் பாதிப்புகள் தான் வருமே தவிர பிரச்சனைகள் சரியாகாது. அப்படி இருக்கும் பிரச்சனைகளில் கரும்புள்ளி பிரச்சனையும் ஒன்றும். பருக்கள் வந்து அது நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி முக அழகையே கெடுத்து விடுகிறது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்று கரும்புள்ளிகளை 2 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக மறைய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Face Dark Spot Removal Home Remedies in Tamil:
- உருளைக்கிழங்கு – 1
- எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
- அரிசி மாவு – 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 2 ஸ்பூன்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். பின் அதில் அரிசி மாவு 2 ஸ்பூன் அல்லது உங்கள் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ள வேண்டும்.
அதேபோல உருளைக்கிழங்கை அரைத்தோ அல்லது அதனை சீவியோ அதன் சாறை மட்டும் தனியாக எடுத்து இதில் சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு அதில் ரோஸ் வாட்டர் தேவையான அளவு சேர்த்து பேஸ்ட் போல நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
உங்க முடி வளர்ந்து கொண்டே போவதை நீங்கள் காண வேண்டுமா.. அப்போ முருங்கை கீரையை இப்படி பயன்படுத்துங்க |
அவ்வளவு தான் கரும்புள்ளிகளை மறைக்கும் பேஸ் பேக் ரெடி..! இதில் சேர்த்திருக்கும் அனைத்து பொருட்களும் கரும்புள்ளிகளை மறைய செய்யும் பண்புகளை கொண்டுள்ளன. மேலும் இவை முகக்கருமையை போக்கி முகத்தை எப்போழுதும் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்கி முகத்தை பிரகாசிக்க செய்கிறது.
அப்ளை செய்யும் முறை:
இந்த பேஸ்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து குறைந்தது 20 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும். அதேபோல இந்த பேஸ்டை உங்கள் வீட்டு பிரிட்ஜ் Ice Cube பாக்சில் வைத்து ஐஸ் கட்டியாக செய்து தினமும் முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவுடன் தோன்றும்.
நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.. அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |