தேமல் இருந்த இடம் தெரியாமல் போக இது ஒன்னு மட்டும் செய்தால் போதும்..!

Advertisement

தேமல் மறைய டிப்ஸ்

முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படுவது போல மற்றொரு பிரச்சனையும் சிலருக்கு காணப்படுகிறது. அதாவது முகத்தில் தேமல் பிரச்சனையானது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் அதிகமாக வருகிறது. பருக்களை கூட எப்படியாவது மறைய வைத்து விடலாம். ஆனால் தேமலை எளிதில் மறைய வைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். அதிலும் சிலர் தேமலை மறைய வைக்க வேண்டும் என்று கடைகளில் விற்கும் கிரீம், பவுடர் மற்றும் சோப்பு ஆகியவற்றையினை பயன்படுத்துவார்கள். ஆனால் இதிலும் முழுமையான பலன்கள் சிலருக்கு கிடைப்பது இல்லை. அதனால் இன்றைய பதிவில் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி தேமலை மறைய வைப்பது என்று தான் தெரிந்துகொள்ள் போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேமல் வருவதற்கான காரணங்கள்:

நம்முடைய உடலில் ஏற்படும் Malassezia furfur என்ற கிருமியின் பாதிப்பால் தான் தேமல் வருகிறது. இந்த Malassezia furfur என்ற கிருமி பாதிப்பானது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரினையும் பாதிக்கிறது. மேலும் நம்முடைய உடலில் சேரும் அழுக்குகளினாலும் தேமல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

அதேபோல உடம்பில் தேமல் உள்ளவர்கள் கசப்பு மற்றும் இனிப்பு அதிக உள்ள உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும்.

மற்றொரு டிப்ஸ்👇👇 முகத்தை விட கை ரொம்ப கருப்பா இருக்கா.. அதை எளிதில் வெண்மையாக்க இதோ சில இயற்கையான வழிகள்.. 

Themal Home Remedies in Tamil:

தேமல் மறைவதற்கு கீழே இரண்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த இரண்டு குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் நீங்கள் அப்ளை செய்ய வேண்டும்.

குறிப்பு- 1

 

என்னென்ன பொருட்கள் தேவை:

  • பாசிப்பருப்பு
  • வெட்டி வேர்
  • கோரைக்கிழங்கு
  • வேப்பிலை

செய்முறை:

 themal home remedies in tamil

உங்களுடைய உடம்பில் தேமல் இருக்கும் அளவிற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டும் இல்லாமல் வேப்பிலையில் பாக்டீரியாக்களை அழித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யும்.

அதனால் மிக்சி ஜாரில் சுத்தம் செய்த வெட்டி வேர், கறிவேப்பிலை, கோரைக்கிழங்கு மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றையினை நன்றாக பேஸ்ட் போன்ற பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது தயார் செய்து வைத்துள்ள பேஸ்ட்டினை குளிக்கும் போது தேய்த்து குளித்தால் போதும் உடலில் உள்ள தேமல் ஆனது விரைவில் மறைந்து விடும்.

மற்றொரு டிப்ஸ்👇👇 7 நாட்களில் பாதவெடிப்பு நீங்க தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருளை மட்டும் கலந்து தடவுங்க போதும் 

குறிப்பு- 2

என்னென்ன பொருட்கள் தேவை:

  • கருஞ்சீரகம்
  • எலுமிச்சை பழம்

செய்முறை:

themal maraiya tips in tamil

கருஞ்சீரகம் மற்றும் எலுமிச்சை சாற்றின் கலவை ஆனது தேமலுக்கு சிறந்த ஒரு தீர்வாக இருக்கிறது. அதனால் முதலில் உங்களுக்கு இருக்கும் தேமலுக்கு ஏற்றவாறு கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு கஞ்சீரகத்தை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல செய்து கொள்ள வேண்டும். பின்பு அந்த கருஞ்சீரக பவுடரில் 2 அல்லது 3 சொட்டு எலுமிச்சை சாற்றினை சேர்த்து இரண்டினையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது தயார் செய்து வைத்துள்ள இந்த பேஸ்ட்டினை தேமல் இருக்கும் இடத்தில் அப்ளை செய்தால் போதும் தேமல் விரைவில் இருந்த இடம் தெரியாமல் போகிவிடும் என்று கூறப்படுகிறது.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

Advertisement