முடி நீளமாக வளர | How to Grow Hair Faster Naturally
இந்த பதிவானது பெண்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் பெண்களுக்கு காணப்படும் முடி உதிர்வு பிரச்சனைக்கு இயற்கையான முறையில் என்ன செய்வது என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் நன்றாக கருப்பாக வளர வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால் அதற்கு சரியான முறையில் எதை பின்பற்ற வேண்டும் என்று அவ்வளவாக யாருக்கும் தெரிவது இல்லை. வீட்டில் இருக்க கூடிய எளிமையான பொருள்களை வைத்து முடியை வளர்ப்பது எப்படி என இன்றைய பதிவில் இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து 1 இன்ச் கூட வளராமல் இருக்கும் முடியினை வளரச் செய்வது என்று தெரிந்துக்கொள்ள் போகிறோம்.
நீளமான முடி வளர:
- வெந்தயம்- 5 ஸ்பூன்
- காய்ந்த நெல்லிக்காய்- 25 கிராம்
- கருஞ்சீரகம்- 2 ஸ்பூன்
- Green Tea Life- 3 ஸ்பூன்
- காட்டன் துணி- போதுமான அளவு
- தண்ணீர்- 1 டம்ளர்
உங்களுடைய முடி அடர்த்தியாக வளர மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் சரியான அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ வெறும் 5 நிமிடத்தில் முகத்தில் இருக்கும் அழுக்கினை வெளியேற்றி முகத்தை பளிச்சென்று வைக்க இது மட்டும் போதும்..
முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர:
பொருட்களை வைத்து என்ன செய்வது:
தலை முடி நீளமாக வளருவதற்கு சொல்லப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்து தயாராக வைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
கலந்த பின்பு என்ன செய்வது:
இப்போது ஒரு மிக்சி ஜாரில் கலந்து வைத்துள்ள பொருட்களை நன்றாக பவுடர் போல அரைத்து ஒரு பவுலில் வைத்து கொள்ள வேண்டும்.
காட்டன் துணியில் பொருட்களை சேருங்கள்:
அடுத்து அரைத்து வைத்துள்ள பவுடரை காட்டன் துணியில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக பந்து போல முடிச்சி போட்டு வைத்து கொள்ளுங்கள்.
அடுப்பில் பாத்திரத்தை வைய்யுங்கள்:
கடைசியாக அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 1 டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானதும் அதில் பொருட்களை சேர்த்து முடிச்சி போட்டு வைத்துள்ளதை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். சிறிது நேரம் களித்து அடுப்பில் உள்ளதை இறக்கி வைத்து விடுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ 2 நாட்களில் உங்க முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் மறைய வேண்டுமா அப்போ துளசியுடன் இதை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க போதும்
எப்படி பயன்படுத்துவது:
இப்போது கொதிக்க வைத்துள்ள தண்ணீரை நன்றாக ஆற வைத்து விடுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீரை உங்களுடைய தலையில் நன்றாக முடியின் வேர் வரை செல்லுமாறு அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரம் 2 முறை அப்ளை செய்தால் போதும் முடி நீளமாகவும் கருப்பாகவும் வளரும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |