முகம் இளமையாக இருக்க
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையினை பொறுத்தவரை காலங்களையும், வயதினையும் ஒருபோதும் தடுத்த நிறுத்தி வைக்க முடியாது. இந்த இரண்டும் மிகவும் வேகமாக சிறிய சிறிய மாற்றங்களுடன் இருக்கக்கூடிய ஒன்று ஆகும். இவை அனைத்தும் மாற மாற நம்முடைய தோற்றமும் மாறிக்கொண்டே போகும். அதாவது முதுமை நிலைமையினை நோக்கி சென்றடையும். இத்தகைய முதுமை நிலை ஏற்படும் போதும் முகம் சுருக்கம் அடைந்து வயதான தோற்றம் காணப்படும். ஆனால் பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் இளமையான தோற்றத்தினையே தான் விரும்புகிறார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் முகம் எத்தனை வயது ஆனாலும் இளமையுடன் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகம் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்:
முகம் என்றும் இளமையாக இருப்பதற்கு கீழே இரண்டு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய குறிப்புகளில் எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கிறதோ அதனையே நீங்கள் ட்ரை செய்து பார்க்கலாம்.
குறிப்பு- 1
- வாழைப்பழம்- 1
- தேன்- 2 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
வாழைப்பழம் ஃபேஸ் பேக் தயார் செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை முதலில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஃபேஸ் பேக் செய்முறை:

முதலில் எடுத்துவைத்துள்ள பழுத்த வாழைப்பழத்தினை சிறு சிறு துண்டாக நறுக்கி ஒரு பவுலில் சேர்த்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த வாழைப்பழங்களை உங்களுடைய கைகளால் நன்றாக பேஸ்ட் போல மசித்து கொள்ள வேண்டும்.
இப்போது மசித்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் 2 ஸ்பூன் தேன் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை கலந்து கொள்ள வேண்டும். முகத்தினை இளமையாக வைக்கக்கூடிய ஃபேஸ் பேக் தயார்.
எப்படி பயன்படுத்துவது:
தயார் செய்து வைத்துள்ள வாழைப்பழ ஃபேஸ் பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டும். பின்பு 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செய்தால் போதும் முகத்தில் இருக்கும் சுருக்கும் அனைத்தும் நீங்கி முகம் இளமையாக இருப்பதை பார்க்கலாம்.
| இப்படியும் கூட உதட்டை சிவப்பாகவும் மற்றும் அழகாகவும் வைக்கலாம் ட்ரை பண்ணி பாருங்கள் |
குறிப்பு- 2
- தயிர்- 2 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
- வெள்ளரிக்காய்- 1 துண்டு
ஃபேஸ் பேக் செய்முறை:

கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் இந்த இரண்டின் சேர்க்கை ஆனது முகத்தை இளமையாக வைப்பதோடு மட்டும் இல்லாமல் முகத்தை பளிச்சென்றும் மாற செய்கிறது.
அதனால் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கற்றாழை ஜெல், தயிர் மற்றும் தேன் என இந்த மூன்றனையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது எடுத்து வைத்துள்ள வெள்ளரிக்காயினை நன்றாக அலசி கொண்டு பின்பு அதனை வட்ட வடிவமாக நறுக்கி கொள்ளுங்கள்.
அடுத்து அந்த வெள்ளரிக்காயினை கலந்து வைத்துள்ள பேஸ்டுடன் சேர்த்து நன்றாக கலந்து பின்பு முகத்தில் வைத்து தேய்க்க வேண்டும். 10 நிமிடம் கழித்து முகத்தினை குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும்.
இந்த முறை ஆனது உங்களேயே வியக்க வைக்கும் அளவில் இளமையாக இருக்க செய்யும்.
முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறைந்து முகம் என்றும் இளமையாக இருப்பதற்கான குறிப்புகள்..
| இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |














