வெந்தயத்தை பயன்படுத்துங்க ஒரு மாசத்துல முடியின் வளர்ச்சியை அப்படி அதிகரிக்கும்..

Advertisement

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெந்தயம் 

பெண்களே உங்களின் முடியயின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அன்பான வணக்கம்.! முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக பல ஹேர் பேக் மற்றும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். இதனால் எந்த ரிசல்ட்டும் இல்லை என்று கவலைப்படுபவர்கள் ஏராளமானோர். அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக ஹேர் பேக்கை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

வெந்தயம் – 5 தேக்கரண்டி

கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய்- 2 தேக்கரண்டி

செம்பருத்தி பூ-6

பெரிய நெல்லிக்காய்-4

ஹேர் பேக் செய்முறை: 

ஹேர் பேக் செய்முறை

முதல் நாள் இரவே வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் உங்க முடிக்கு தேவையான அளவு எடுத்து ஊற வைத்து கொள்ளவும்.

மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளவும். பின் அதனுடன் 4 பெரிய நெல்லிக்காயை சிறியதாக நறுக்கி அதனையும் சேர்த்து கொள்ளவும்.

கடைசியாக அதில் செம்பருத்தி பூ 6 சேர்த்து கொள்ளவும். இதற்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி அரைத்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளரும்.. இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க

 

அரைத்த விழுதை ஒரு பவுலில் சேர்த்து கொள்ளவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும். அடுத்து இந்த பேக்கை காட்டன் துணியை பயன்படுத்தி வடிக்கட்டி கொள்ளவும். வடிகட்டாமல் தடவினால் சேர்த்த பொருட்கள் எல்லாம் தலையில் ஓட்டி கொள்ளும். அதனால் வடிக்கட்டி பயன்படுத்துவது சிறந்தது.

பயன்படுத்தும் முறை:

இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துவதற்கு முன் தலை முழுவதும் தேங்காய் எண்ணெயை தடவி கொள்ளவும். எதற்காக எண்ணெய் தடவுகிறோம் என்றால் நீங்கள் தடவுகிற ஹேர் பேக் ஆனது எண்ணெயுடன் சேர்ந்து நல்ல ரிசல்ட்டை கொடுக்கும்.

அதன் பி[பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை தலை முடி முழுவதும் அப்பளை செய்து கொள்ளவும். இதனை தலையில் 1/2 மணி நேரம் வைத்திருந்து அதன் பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement