Body Whitening Home Remedies in 10 Days
பொதுவாக அனைவருமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். அழகு படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பதை தம்மை மேன்மைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். அதாவது முகம் பொலிவிழந்து காணப்பட்டால் பளபளப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். கலர் குறைவாக இருந்தால் அதிகப்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்காக எடுத்து கொள்வது செயற்கை நிறைந்த பொருட்களை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் பக்க விளைவுகள் அதிகமாக இருக்கும் என்றே தெரிந்தும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கையான முறையில் நிரந்தரமாக தங்களை மேம்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவதில்லை. அதனால் தான் இன்றைய பதிவில் வெள்ளையாகுவதற்கு என்ன செய்யலாம் என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
அரிசி மாவு மற்றும் பால்:
ஒரு கிண்ணத்தில் 4 தேக்கரண்டி அரிசி மாவு எடுத்து கொள்ளவும், அதனுடன் 4 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் வைத்திருக்க வேண்டும், அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
அரிசி மாவு சருமத்திற்கு சிறந்த பொருளாக இருக்கிறது. மேலும் இவை சருமத்தை பளபளப்பாகவும், சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
பால் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. இவை இரண்டு பொருட்களும் சேரும் போது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.
முகம் கண்ணாடி போல் மின்ன வேண்டுமா.! அப்போ இதை செய்திடுங்க..
தயிர் வெள்ளையாக:
ஒரு பவுல் எடுத்து அதில் 2 ஸ்பூன் தயிர் எடுத்து கொள்ளவும், அதனுடன் 2 தேக்கரண்டி தேன் பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை உங்க முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்யும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வயதான தோற்றம் போன்றவற்றை நீக்குகிறது.
மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் இருப்பதால் பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
மேல் கூறப்பட்டுள்ள இரண்டு பேக்குகளில் எதை பயன்படுத்தினாலும் எதை வேண்டுமானாலும் தொடர்ந்து 10 நாட்களுக்கு பயன்படுத்தி வாருங்கள் மாற்றத்தை காண்பீர்கள்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |