10 நாட்களில் முடி வளர
பொதுவாக ஆண்களை விட பெண்கள் தான் முடி அதிகமாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆண்களும் நினைப்பார்கள் எப்போது நினைப்பார்கள் என்றால் திருமண வயது எட்டு போது நினைப்பார்கள். ஆனால் பெண்கள் எப்பொழுதும் முடி அதிகமாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இதற்காக கடையில் விற்கும் எண்ணெய் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் அவ்வப்போது வேண்டுமானால் முடியின் வளர்ச்சியை காண்பீர்கள். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஆயிலோ அல்லது ஷாம்புவை விட்டு பாருங்கள். தலை முடியில் எல்லா பிரச்சனையும் ஏற்படும். அதனால் இயற்கையான முறையில் நீங்கள் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இயற்கையான முறையில் எண்ணெய் தயாரிப்பு முறை:
தேவையான பொருட்கள்:
வெந்தயம் – 2 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – 1
கிராம்பு – 5
வெள்ளை எள்- 2 ஸ்பூன்
எண்ணெய் செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைக்க வேண்டும். அதனுடன் 100 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அதனுடன் மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கொதிக்க வேண்டும்.
அசுர வேகத்தில் முடி வளர வேண்டுமா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க
சேர்த்த பொருட்கள் எல்லாம் எண்ணெயில் இறங்கி நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து விடவும். எண்ணெய் ஆறியதும் வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி விட்டு எண்ணெயை மட்டும் எடுத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்.
அப்ளை செய்யும் முறை:
தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை தலை முடி முழுவதும் தடவி 30 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பை தேய்த்து குளிக்க வேண்டும்.
இந்த எண்ணெயை நீங்கள் வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து 10 முறை செய்து வந்தால் முடியின் வளர்ச்சியை காண்பீர்கள்.
மேலும் முடி வளர்ச்சி மட்டுமில்லாமல் முடியை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.
| இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |













