15 நாட்களில் முடி வளர வெந்தயத்தில் தயாரித்த இந்த எண்ணெய் மட்டும் போதும்..

Advertisement

முடி வளர்ச்சிக்கான எண்ணெய்

பெண்கள் தங்களின் முடி வளர்ச்சிக்காக ஆயிலையும், ஹேர் பேக்கையும் பயன்படுத்துகிறார்கள்.  இதனால் சில பேருக்கு நல்ல ரிசல்ட்டை கொடுத்திருக்கும். சில பேருக்கு ரிசல்ட் இருக்காது. இதனால் மற்றவர்களுக்கு நிறைய முடி இருந்தால் என்ன எண்ணெய் தான் தடவுகிறார்கள் இவ்ளோ முடி இருக்குதுன்னு யோசித்து கொண்டே இருப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இயற்கையான எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. வெந்தயம் – 5 தேக்கரண்டி
  2. கற்றாழை -1
  3. நெல்லிக்காய் -4
  4. செம்பருத்தி இலை -5
  5. கருவேப்பிலை – சிறிதளவு
  6. மருதாணி இலை- சிறிதளவு
  7. வெற்றிலை – 2
  8. சின்ன வெங்காயம்- 10
  9. துளசி – சிறிதளவு
  10. வேப்பிலை – சிறிதளவு
  11. செம்பருத்தி பூ – 5

எண்ணெய் செய்முறை:

முடி வளர்ச்சிக்கான எண்ணெய்

முதல் நாள் இரவே வெந்தயத்தை தண்ணீரில் சேர்த்து ஊற வைத்து கொள்ளவும்.

முதலில் கற்றாழையை எடுத்து அதன் தோல் பகுதியை சீவி விட்டு உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்துகொள்ளவும்.

அதன் பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும், அதில் கற்றாழை ஜெல், வெந்தயம், நெல்லிக்காய், செம்பருத்தி இலை, கருவேப்பிலை, வெற்றிலை, சின்ன வெங்காயம் போன்றவற்றை சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

அடுத்து அதே மிக்சி ஜாரில் நெல்லிக்காய், செம்பருத்தி இலை, துளசி இலை, வேப்பிலை, செம்பருத்தி பூ, கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.

ஒரு இரும்பு கடாய் வைத்து கொள்ளவும், அதில் அரைத்து வைத்த இரண்டு பேஸ்ட்டுகளையும் சேர்க்க வேண்டும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.

முக்கியமாக அடுப்பை குறைவான தீயிலே வைத்து கொதிக்க விடவும். எண்ணெயானது நன்றாக கொதித்து எண்ணெயின் நிறம் மாற ஆரம்பிக்கும். அப்போது அடுப்பை அணைத்து விடவும்.

அடுத்து எண்ணெயை வடிக்கட்டியை பயன்படுத்தி வடிக்கட்டி விட்டு சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும்.

1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளரும்.. இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க

பயன்படுத்தும் முறை:

நாம் தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை 30 நாட்கள் வரைக்கும் பயன்படுத்தலாம். அதனால் இந்த எண்ணெயை நீங்கள் தினமும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது போல தடவி கொள்ளலாம். இல்லயென்றால் வாரத்தில் ஒரு நாள் இந்த எண்ணெயை தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கலாம்.

இந்த எண்ணெயை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வாருங்கள் முடியின் வளர்ச்சியை காண்பீர்கள்.

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement