4 நாளில் 10 சென்டிமீட்டர் முடி வளரும்
பொதுவாக நம் அனைவருக்குமே முடி கொட்டாமல் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். இப்படி இருக்கும் போது நாம் முடி வளர்ச்சிக்காக கடைகளில் கிடைக்கும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துவோம். இதனால் முடி உதிர்வு, நரை முடி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் இதை சரி செய்வதற்கு மீண்டும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இதனால் முடிக்கு மேலும் பாதிப்புகள் தான் வருகிறது. அதனால் தான் இன்று இந்த பதிவில் ஹேர் பேக் மூலம் 4 நாட்களில் முடியை 10 சென்டி மீட்டர் வரை வளர செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
4 நாளில் 10 சென்டிமீட்டர் முடி வளர ஹேர் பேக்:
- செம்பருத்தி இலை – 10
- காய்ச்சாத பால் – தேவையான அளவு
- வெந்தயம் – 4 டேபிள் ஸ்பூன்
- பச்சை பயிர் – 4 டேபிள் ஸ்பூன்
முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும். பின் அதில் உங்கள் முடிக்கு எவ்வளவு செம்பருத்தி இலைகள் தேவையோ அந்த அளவிற்கு சேர்த்து கொள்ளவும். பின் அதில் காய்ச்சாத பால் தேவையான அளவு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பின் அந்த சாறை ஒரு துணியை வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும். அடுத்து வெந்தயம் மற்றும் பச்சை பயிர் இரண்டையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
பிறகு அரைத்த பொடியை செம்பருத்தி சாறுடன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள். அளவு தான் ஹேர் பேக் ரெடி.
1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளரும்.. இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க |
ஹேர் பேக் அப்ளை செய்யும் முறை:
இந்த ஹேர் பேக்கை தலையில் அப்ளை செய்வதற்கு முன் முடியை சிக்கு இல்லாமல் சீவி கொள்ளுங்கள். பின் இந்த ஹேர் பேக்கை முடியின் அடிப்பகுதியில் இருந்து முடியின் நுனி பகுதி வரை நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
இந்த ஹேர் பேக் தலையில் 30 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். பின் நீங்கள் எப்பொழுதும் பயன்படுத்தும் ஷாம்பை போட்டு தலையை அலசிக்கொள்ளலாம்.
இதுபோல வாரம் 1 முறை செய்து வந்தால் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்வதை நீங்களே காணலாம். மேலும் இதில் இருக்கும் சத்துக்கள் முடியை கருமையாகவும் உதிராமலும் வளர செய்யும்.
உங்களுடைய வயதை 10 வருடம் குறைத்து காட்ட வேண்டுமா
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |