முகம் பளபளப்பாக
தங்களின் முகத்தை அழகாக வைத்து கொள்வதற்காக பார்லருக்கு சென்று அழகுபடுத்தி கொள்கிறார்கள். இப்படி அழகுபடுத்தி கொண்டாலும் கொஞ்ச நேரத்திற்கு மட்டும் தான் நமது முகத்தை அழகாக வைத்து கொள்ளும். நேரம் கழித்தும் நமது முகமானது பொலிவிழந்து காணப்படும். அதனால் இயற்கையான முறையை தேர்ந்தெடுப்பது நல்லது. நம் பதில் இயற்கையான முறையில் முகத்தில் உள்ள பருக்களை நீக்குவது முதல் தேவையில்லாமல் இருக்கும் முடியை நீக்குவது வரைக்கும் பதிவுகளை பதிவிட்டுள்ளோம். அதனை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். அந்த வகையில் இன்றைய பதிவில் முகம் பளபளப்பாக என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகம் பளபளப்பாக இயற்கையான முறை:
மஞ்சள்:
மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கிறது. இவை சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் தினமும் குளிக்கும் போது முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்துவார்கள்.
ஒரு பவுல் எடுத்து கொள்ளவும், அதனுடன் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி பால் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.
இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரைக்கும் முகத்தில் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நேரில் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த குறிப்பை வாரத்திற்கு இரண்டு முறை ட்ரை செய்ய வேண்டும். இது போல தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
நீங்களே போதும்டா முடி வளர்ந்தது அப்படின்னு சொல்லனுமா அப்போ இந்த வெந்தயம் மட்டும் போதும்..
கற்றாழை:
கற்றாழையில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கிறது. மேலும் ஈரப்பதமாக வைத்து கொள்வதற்கும் உதவுகிறது.
இதற்கு முதலில் ஒரு கற்றாழையை எடுத்து அதன் தோல் பகுதியை நீக்கி விட்டு உள்பகுதியில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த ஜெல்லை முகத்தில் அப்பளை செய்த்து 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த பேக்கை வாரத்தில் வாரத்தில் ஒரு நாள் என்று 3 வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால் உங்களின் முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையதால் நுரையீரல் பிரச்சனை, சளி பிரச்சனை, இருமல் பிரச்சனை இருந்தால் இந்த குறிப்பை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் உங்களது பிரச்சனைகளை அதிகப்படுத்தும்.
என்றும் பள பளப்பான சருமத்திற்கு சந்தனத்தை இப்படி பயன்படுத்துங்கள் போதும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |