ஆளுமை திறனை வளர்த்துக்கொள்வது எப்படி….

Advertisement

Personality Development 

பர்சனாலிட்டி டெவலப்மென்ட் ஒரு தனிமனித தோற்றம் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல, அதில் தனி மனிதனின் திறமைகளும் அடங்கியுள்ளது. நீங்கள் பார்க்கும் பார்வையில் இருந்து நீங்கள் பயன்படுத்தும் கைகுட்டை வரை உங்கள் பெர்சனாலிட்டியில் வருகிறது.  ஒரு தனிநபரின் ஆளுமை அவனது தோற்றம், நடத்தை, அணுகுமுறை, கல்வி போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.  ஆளுமை வளர்த்துக்கொள்ள நினைத்தால் அது ஒரே நாளில் நடக்காது. இது காலப்போக்கில் நிகழக்கூடியது. உங்கள் ஆளுமைத்திறனை நீங்கள் மேம்படுத்திக்கொள்ள எளிய வழிமுறைகள் இருக்கின்றன. அவ்வறுள் சிலவற்றை காண்போம்.

1. உடல் அசைவுகள் (Body Language) கவனியுங்கள்:

ஒருவர் பேசும்போது அவருடைய முக பாவனை (Facial Expression) எப்படி இருக்கிறது என்பதை கவனித்து பேசுவது சிறந்தது. ஒருவர் சிரித்துக்கொண்டு பேசுகிறாரா? கோபத்தில் பேசுகிறாரா? நிதானமாக பேசுகிறாரா? எரிச்சலுடன் பேசுகிறாரா? அன்புடன் பேசுகிறாரா? என்பதை அவரது முகத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

‘உடல் அசைவுகள்’ பற்றி தெரிந்துக்கொள்ளாமல், வெறும் வார்த்தைகளை மட்டும் கேட்டு அர்த்தம் கொண்டால் முழுமையான அர்த்ததை புரிந்துகொள்ள இயலாது. அதே நேரத்தில் ஒருவரது உடல் அசைவுகளையும், கருத்தில் கொண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் கொள்ளும்போது அந்தத் தகவலை முழுமையாக புரிந்துகொள்ள இயலும். சிலவேளைகளில் மவுனங்களே வார்த்தைகளாக மாறி பதில்களைத் தெரிவிக்கும்.

எனவே பெர்சனாலிட்டியை வளர்த்துக்கொள்ள விரும்புவர்கள் உடல் அசைவுகளில் அதிக கவனம் செலுத்தி தகவல்களைப் பெறுவது நல்லது.

personality development இனி tamil

தன்னம்பிக்கை பழமொழிகள் 

2. மனதை ஒருமுகப்படுத்த பயிற்சி தேவை

மனம் எதைப் பற்றி அதிக ஆர்வம் செலுத்துகிறதோ, அதைப்பற்றி தகவல்களை அதிகம் தெரிந்துகொள்வதற்கு கவனம் செலுத்துவோம். உங்களுக்கு ஒரு செயலில் ஆர்வம் ஏற்பட்டால் மனதை ஒருநிலைப்படுத்தி அந்த செயலில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த உங்களுக்கு பிடித்த இசை கேட்பது. புத்தகம் வாசிப்பது போன்றவற்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி அதில் கவனத்தை செலுத்த முடியும்.

3. கருத்தைக் கவனியுங்கள்

தம்மோடு பேச வருபவர்கள் எந்தவிதமான கருத்தை சொல்வதற்காக வருகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். அவர்கள் பேச்சின் ‘உட்பொருள்’ அல்லது ‘உட்கருத்து’ என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பேசும் விதத்தை கவனிப்பதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் பேசவரும் பொருளின் உட்கருத்தையும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

personality development tips in tamil

உதாரணத்திற்கு, ஒரு பேச்சுப போட்டியில் பேசுவரின் வார்த்தை கோர்வைகளை எவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்களோ , அதே அளவுக்கு அதன் உட்கருத்துக்களையும் கவனிக்க வேண்டும்.

எனவே பேச்சிலுள்ள கருத்தை ஆழ்ந்து கவனித்து ஒரு முடிவுக்கு வருவது நல்லது.

புடவைக்கு ஏற்ற சிறந்த ஹேர் ஸ்டைல் இதுதான்..!

4. அதிகம் கேள் குறைவாக பேசு..

மனிதருக்கும் இரண்டு காதுகள் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு வாய்தான் இருக்கிறது அதற்கு அர்த்தம் என்னவென்றால் அதிகம் கேள் குறைவாக பேசு என்பதாகும்.

ஒரு சிறந்த மனிதன் தான் கேட்பதை இரண்டு மடங்காகவும், பேசுவதை ஒரு மடங்காகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே அறிவைப் பெருக்க வேண்டுமென்றால் பேச்சைக் குறைத்து தகவல்களை கவனித்துக் கேட்பதற்கு அதிக நேரம் ஒதுக்கவது நல்லது.

5. திறந்த மனதோடு கேளுங்கள்:

நம் எதிரேயுள்ளவர் என்ன கருத்து சொல்ல வருகிறார் என்பதை முழுமையாக கேளுங்கள். அவர்கள் சொல்லும் கருத்து உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். அவரின் கருத்தை முழுமையாக கேட்பதன் மூலம் உங்களுக்கு புதிய வழிகள் கூட கிடைக்கலாம்.

உங்களுக்கு பிடித்த எண்ணை வைத்து உங்கள் குணத்தை தெரிந்து கொள்வோம்

மற்றவர்களுடன் பழகும் போது நேர்மறையான அணுகுமுறையை கடைப்பிடியுங்கள். கூடவே உங்களின் உடல்மொழியையும் கவனியுங்கள்.

உங்களை நினைத்து நீங்களே பெருமிதம் கொள்ளுங்கள். இது உங்கள் நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

தவறுகளைச் செய்வது பற்றி கவலைப்படாதீர்கள், உங்கள் பயணத்தில் தவறுகளும் ஒன்று அவ்வளவுதான்.

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளெல்லாம் பிறரின் பேச்சை கூர்ந்து கவனிக்கவும், அதன்மூலம் நல்ல தகவல்களை மனதில் பதிவைத்து பெர்சனாலிட்டி என்ப்படும் ஆளுமைத் தன்மையை சிறந்த முறையில் வளர்த்துக் கொள்ள உதவும்.

இது போன்ற பல ஆளுமை தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> life  style
Advertisement