நரை முடி கருப்பாக மாற்ற இயற்கையான டை
நம் முன்னோர்களின் காலத்தில் வயதானால் கூட நரைமுடி ஏற்படாது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் உள்ள 10 வயது சிறுவனுக்கே நரை முடி ஏற்ப்டுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடமால் இருப்பது, தண்ணீர் சரியாக குடிக்காமல் இருப்பது, மன அழுத்தம், கவலை போன்றவை காரணமாக இருக்கிறது. நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டையை பயன்படுத்துகிறார்கள். இதனால் தலை முடியில் பிரச்சனை ஏற்படுத்துவதோடு இல்லாமல் உடல் ஆரோக்கியத்திலும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதனால் இயற்கையான வழிமுறையை பின்பற்றுவது நல்லது. இயற்கையான வழிமுறையை பின்பற்றும் போது கருப்பாக மாறுவதற்கு சில நாட்கள் ஆகலாம். ஆனால் நிரந்தர தீர்வை கொடுப்பது இயற்கையான வழிமுறை தான். அதனால் இந்த பதிவில் ஹென்னாவை வைத்து நரை முடியை கருப்பாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இயற்கையான டை செய்ய தேவையான பொருட்கள்:
ஹென்னா பவுடர்-
ஆம்லா பவுடர்-
அவுரி பவுடர்-
டீ தூள்-
காபி தூள்-
டை செய்முறை:
முதலில் ஒரு டம்ளர் தண்ணீரில் டீ தூள் 1 தேக்கரண்டி, காபி தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து சாயம் தண்ணீரில் சாயம் இறங்கிய பிறகு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி கொள்ளவும்.
அடுத்து ஒரு பவுலில் ஹென்னா பவுடர், ஆம்லா பவுடர் சேர்த்து கொள்ளவும். அதனுடன் செய்து வைத்துள்ள கஷாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 1 மணி எரம் கழித்து தலை தேய்த்து குளிக்க வேண்டும். தலை தேய்த்து குளித்த பிறகு தலையானது செம்பட்டை நிறத்தில் தான் இருக்கும். பயப்பட வேண்டாம், இன்னொரு பேக் அப்பளை செஞ்சா கருப்பாக மாறிவிடும்.
அடுத்து அவுரி பவுடரை ஒரு பவுலில் சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க அவுரி பவுடரை மிக்ஸ் செய்ததும் உடனே தலையில் அப்ளை செய்ய வேண்டும். இந்த பேக்கை அப்ளை செய்த பிறகு 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்க வேண்டும்.
இது போல நீங்கள் மாதத்தில் ஒரு தடவை என்று தொடர்ந்து செய்து வந்தாலே நரை முடி நிரந்தரமாக கருப்பாக மாறிவிடும்.
கண்ணுக்கு தெரியாத நரைமுடி கூட கருப்பாக மாற செலவே இல்லாமல் பாட்டி சொன்ன ரகத்தியதை ட்ரை பண்ணுங்க..!
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |