ஆரோக்கியமான சருமத்திற்கு
பெரும்பாலானோர், தனது முகம் வெள்ளையாகவும் முகப்பருக்கள் அற்று அழகாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் முகமோ அதற்கு மாறாக இருக்கும். இருந்தாலும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள பல வழிகளை கடைப்பிடித்து கொண்டு தான் இருப்போம். ஒரு சிலர் முகத்தில் உள்ள பருக்கள் மறைய பல விலை உயர்ந்த பொருட்களை சந்தையில் இருந்து வாங்கி பயன்படுத்துவீர்கள். ஆனால் அவை எல்லாம் ஒரு சில நாட்கள் தான் பலனளிக்கும். சில கிரீம் சருமத்தையும் பாதிக்கும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு இயற்கை பொருட்கள். எனவே எப்போதும் நமக்கு பலனளிப்பது இயற்கை பொருட்கள் தான். எனவே இப்பதிவில் இயற்கையான பொருட்களை வைத்து எப்படி முகத்தை பருக்கள் அல்லாமல் வெண்மையாக வைத்து கொள்வது என்பதை இப்பதிவில் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர்:
சந்தனம் இயற்கையாகவே சருமத்தைப் பொலிவாக்கும் பண்புகளைக் கொண்டது.
ரோஸ்வாட்டர் தோலுக்கு சிறந்தது. எனவே இவை இரண்டும் அதிக அளவில் அழகுசாதன பொருட்களில் பயன்படுத்த படுகிறது.
இவை இரண்டையும் கொண்டு வீட்டிலே சருமத்தை மெருகேற்ற ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்தலாம்.
இவை உங்கள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
- சந்தனம்
- ரோஸ் வாட்டர்
- மஞ்சள் தூள்
தயாரிப்பு முறை:
ஒரு கிண்ணத்தில் சந்தனத்தையும் மஞ்சள் தூளையும் எடுத்து கொள்ளவும். அதன் உடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மிருதுவான பேஸ்ட் ஆக மாற்றிக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தும் முன் முகத்தை நன்றாக கழுவி ஒரு காட்டன் துணியால் துடைத்து கொள்ளவும்.
பின்னர் இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவுடன் இருக்கும்.
இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் பருக்கள் மறைந்து ஆரோக்கியமான சருமத்தை பெறலாம்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |