முகம் சிவப்பழகு பெற பல கிரீமை அப்ளை செய்து எதுவும் ரிசல்ட் கொடுக்கவில்லையா.! அப்போ இத Try பண்ணி பாருங்கள்

Advertisement

முகம் தங்கம் போல் ஜொலிக்க

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும், தாம் அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக பலரும் பலவிதத்தில் தன்னை அழகுபடுத்தி கொள்வர்கள். சில நபர்கள் கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால் சில நேரத்திற்கு மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். சிறிது நேரம் கழித்து முகம் கலையிழந்து காணப்படும். அதனால் இந்த பதவில் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்து கொள்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்தகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl

முகத்தை பளபளப்பாக வைத்து கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்:

Tips 1:

beauty tips for face glowing skin at home in tamil

ஒரு கிண்ணத்தில் பால் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சிறிதளவு கோதுமை மாவு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்னர் தனனுடன் சிறிதளவு தக்காளி சாறு சேர்த்து பேஸ்ட்டாக உருவாக்கி கொள்ளவும்.

பின்னர் இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ்ட்டை  வாரத்திற்கு இருமுறை பயன்படுத்தினால் போதும் பளிச் என்ற சருமத்தை பெறலாம்.

Tips 2:

முகம் சிவப்பழகு பெற

கற்றாழை ஜெல்லை இரவு தூங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி 20 நிமிடங்கள் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

கற்றாழை ஜெலில் உள்ள வைட்டமின்கள் முகப்பரு, கரும்புள்ளி போன்றவற்றை நீக்குவதற்கும் உதவுகிறது. முகம் பளபளப்பாக இருக்க தினமும் பயன்படுத்த வேண்டும்.

முக்கியமாக உங்களுக்கு நுரையீரல் பிரச்சனை, சுவாச பிரச்சனை, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருந்தால் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கற்றாழை குளிர்ச்சி தன்மை உடையது. இதனால் உங்களின் பிரச்சனைகளை இன்னும் அதிகப்படுத்தும்.

செலவே இல்லாம கருமையான மற்றும் அடர்த்தியான முடியை பெற பாட்டி சொன்ன வைத்தியம்….

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement