Beauty Tips for Face in Tamil
நாம் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை இருக்கும். அதாவது எப்போதும் நம்மை பார்த்து மற்றவர்கள் நீங்கள் மிகவும் அழகாக இருக்கின்றிர்கள் என்று கூற வேண்டும் என்பது தான். அப்படி அவர்கள் கூறியவுடன் நாம் நமது அழகின் ரகசியத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதும் ஒரு சிலரின் ஆசையாக இருக்கும். அப்படி நம்மை பார்த்து நீங்கள் அழகாக இருக்கின்றிர்கள் என்று கூறுவதற்கு முதன்மை காரணமாக அமைவது நமது முகம் தான். அதனால் நமது முகம் எப்பொழுதும் பார்ப்பதற்கு அழகாவும் பொலிவுடன் இருக்க வேண்டும் அல்லவா..? அதற்காக தான் இன்று இயற்கையின் முறையில் உங்களின் முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் வைத்திருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெற்று கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Natural BeautyTips for Face in Tamil:
இயற்கையின் முறையில் உங்களின் முகத்தை எப்பொழுதும் பொலிவுடன் பளப்பாகவும் வைத்திருக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:
- கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
- ஃபேஸ் வாஷ் – 1 டேபிள் ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
தலைமுடி கட்டுக்கடங்காமல் வளர முட்டையுடன் இதை கலந்து தடவுங்க போதும்
கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஃபேஸ் வாஷ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
சர்க்கரையை கலந்து கொள்ளவும்:
அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்து கொள்ளுங்கள்.
ரோஸ் வாட்டரை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக அதில் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டரையும் சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து கொள்ளுங்கள்.
பிறகு நன்கு குளிர்ந்த நீரால் உங்களின் முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதால் உங்களின் முகம் நிலவு போல் நன்கு ஜொலிக்க ஆரம்பிக்கும்.
செலவு செய்யாமல் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற பாட்டி வைத்தியம்
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |